நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளரா..! அப்படினா நீங்கள் உடனே படித்து தெரிந்துகொள்ளுங்கள்

Advertisement

Canara Bank Card Charges in Tamil

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் கசப்பான செய்தியாகத்தான் இருக்கும். இது பலருக்கு தெரியாமல் இருக்கும். வங்கியில் பணம் சேர்த்து வைப்பதே பின் வரும் காலங்களில் நமக்கு பயனளிக்கும் என்பதற்காகவும். பணமும் பத்திரமாக இருக்கும் என்பதற்காகவும் தான் பணத்தை வங்கியில் போட்டு வைப்போம். ஆனால் வங்கிகள் நம்முடைய பணத்தை எப்படி குறைப்பது என்று பல்வேறு வழியில் பணத்தை குறைத்து வருகிறார்கள். அது எப்படி குறைக்க முடியும் என்று கேள்வி இருக்கும் அதற்கு தொடர்ந்து பதிவை படித்தால் தான் உங்களுக்கு புரியும். வாங்க படித்து தெரிந்துகொள்வோம்..!

Canara Bank New Charges in Tamil:

கனரா வங்கி தற்போது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி தரும் வகையில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் பணத்தை குறைக்கும் வகையில் பலவேறு கட்டணங்களை உயர்த்தி உள்ளது. அது என்ன என்பதை தெளிவாக பார்ப்போம்..!

கனரா வங்கியானது Debit Card -களின் பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மேலும் கார்டுகளை வருடா வருடம் மாற்ற வேண்டும் என்றும் SMS கட்டணங்களின் மீதான சேவை கட்டணம் மேலும் உயர்த்தி உள்ளதாக கனரா வங்கி கூறியுள்ளது.

Canara Bank Classic Debit Card Charges in Tamil:

கனரா வங்கியில் Classic Debit மற்றும் Standard debit card இரண்டு கார்ட்களிலும் ஆண்டு தோறும் 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது தற்போது அந்த கட்டணத்தை உயர்த்தி உள்ளது அதாவது 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Canara Bank Business Card Charges in Tamil:

கனரா வங்கியில் Business Card மற்றும் Platinum Card இரண்டு கார்ட்களிலும் ஆண்டு தோறும் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது தற்போது ரூ.300 முதல் ரூ.500 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் SMS கட்டணங்கள் வருடம் தோறும் 15 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 மின் மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியம் பெறும் திட்டம்..! எப்படி பெறலாம்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement