Central Government Allowances Windfall Tax in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவரிடமும் பைக் அல்லது கார் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கையில் வாகனம் வைத்திருப்பவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அன்றாடம் செய்யும் செலவு என்றால் அது பெட்ரோல் டீசலுக்கு தான். ஆகவே மத்திய அரசானது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது என்ன மாற்றம் என்பதை இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பவுனு விலை நாளுக்கு நாள் ஏறிட்டே இருக்கு.. இன்னைக்கு விலை எவ்வளவு
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எவ்வளவு..?
பொதுவாக இந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆகவே இதனை தொடர்ந்து மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது இதுவரை ரூ. 8,400 வசூலிக்கப்பட்ட விண்ட்ஃபால் வரியை ரூ. 5,700 ஆக குறைத்துள்ளது. அதெல்லாம் இருக்கட்டும், விண்ட்ஃபால் வரி Windfall Tax Meaning in Tamil என்றால் என்ன என்று யோசிப்பீர்கள்.
Windfall Tax என்பது எரிவாயு மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரியாகும். இதனால் நாடு சந்தையில் உள்ள ஆற்றல் பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.
அதாவது பெட்ரோல், டீசல் மீதான பூஜ்ஜிய ஏற்றுமதி வரியை அரசாங்கம் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் புதிய கட்டணங்கள் 2024 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரியை உயர்த்த காரணம் என்ன..?
அதாவது கடந்த மே 1 ஆம் தேதி விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு திருத்தி அமைத்தது. அதன் படி, உள் நாட்டு கச்சா எண்ணெய் மீதான வரியை ரூ. 9,600 இல் இருந்து ரூ. 8,400 ஆக குறைத்தது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை மத்திய அரசு வரியை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி, மத்திய அரசு விண்ட்ஃபால் வரியை கடுமையாக உயர்த்தியது. எவ்வளவு என்றால், ஒரே நேரத்தில் ரூ. 3,000 வரை உயர்த்தியது. அதாவது ரூ. 6,800 இல் இருந்து ரூ. 9,600 ஆக உயர்த்தியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் அரசு அந்த முடிவை எடுத்தது. ஆனால் இந்த விண்ட்ஃபால் வரி கடந்த ஜூலை 1, 2022 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளன.
- தெலங்கானாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.39 -க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 95.63 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 108.27 -க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 96.16-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- கடப்பாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 108.5 -க்கும், டீசல் ரூ. 96.4 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75 -க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.34 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- குறிப்பாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.76 -க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.36 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகவே இதனை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களுக்கான விண்ட்ஃபால் வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |