எஸ்எஸ்சி தேர்வு
பொதுவாக நாம் பள்ளி படிக்க ஆரம்பம் செய்த காலம் முதல் வேலைக்கு செல்லும் வரை தேர்வு என்பது கட்டாயமான ஒன்று. ஏனென்றால் நாம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே படிப்பு அல்லது வேலை இரண்டில் எதுவாக இருந்தாலும் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு மற்றும் குரூப்-2, குரூப்- 4 போன்ற தேர்வுகள் அனைத்திற்கும் அதிக பாதுகாப்பு அளிக்கப்படும். என்ன தான் தேர்வு என்பது ஒன்றாக இருந்தாலும் கூட அதில் நிறைய மொழிகள் உள்ளது. ஒவ்வொருவரும் அவர் அவருடைய மொழியில் தேர்வினை எழுதி வருகிறார்கள். இதுநாள் வரையிலும் இப்படி நடந்து கொண்டிருந்தாலும் கூட எஸ்எஸ்சி தேர்வு மட்டும் சில மாற்றங்களுடன் அவர் அவருக்கான மொழியில் இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது. இத்தகைய முறையானது எஸ்எஸ்சி தேர்வு எழுதும் நபர்களிடம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இத்தகைய அட்சத்தினை போக்கும் வகையில் மத்திய அரசானது எஸ்எஸ்சி தேர்வு முறை குறித்து புதிய நற்செய்தியினை அறிவித்துள்ளது. அதனால் அந்த அறிவிப்பு என்ன, எப்போது அது நடைமுறைக்கு வரும் போன்ற தகவலை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வு அறிவிப்பு:
கடந்து ஆண்டு நடைபெற்ற எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வு ஆனது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்றது. இத்தகைய தேர்வு முறையானது தேர்வு எழுதும் நபர்களிடம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. ஏனென்றால் அனைத்து நபர்களுக்கும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது.
இந்த தேர்வு முடிந்த பிறகு இம்முறையினை மாற்றி அமைக்கக்கோரி மத்திய அரசிடம் வேண்டும்கொள் வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை எல்லாம் ஆலோசனை செய்து மத்திய அரசானது எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வு குறித்து புதிய நற்செய்தியினை தற்போது அறிவடித்துள்ளது.மேலும் படிக்க
அத்தகைய அறிவிப்பு என்னவென்றால் இந்த வருடத்திற்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வு ஆனது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடிசா, குஜராத்தி, பெங்காலி, உருது, கொங்கணி, அசாமி, மணிப்புரி மற்றும் பஞ்சாபி என 13 மொழிகளில் எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பினை அறிவித்துள்ளது.மேலும் இனி கவலை இல்லாமல் தமிழில் இந்த தேர்வினை எழுதலாம் என்றும் இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட முறையினால் நிறைய நபர்கள் வேலைக்கு வருவதற்கான வாய்ப்பும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இதையும் படியுங்கள்👇👇
இனி இவர்களுக்கு எல்லாம் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்… தமிழக அரசியின் புதிய அறிவிப்பு..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |