ஆதார் அட்டை வைத்துருப்பவர்களுக்கு இலவச வாய்ப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது..! இதற்கான கடைசி தேதி ஜூன் 15..

central govt free notification for aadhaar card renewal online in tamil

ஆதார் அட்டை விவரங்கள்

ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் தனிநபர் அடையாளம் ஆகும். நாம் எங்கு சென்றாலும் முதலில் அங்கு ஆதார் அட்டையினை மட்டும் தான் கேட்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் அத்தகைய ஆதார் அட்டையினை நாம் பாதுகாப்பாக வைத்து இருப்பது மிகவும் அவசியம். ஆனால் ஆதார் கார்டில் நிறைய நபர்களுக்கு பிழைகள் உள்ளது. இவற்றை சரிசெய்வதற்காக நாம் நாள் கணக்கில் இ-சேவை மையத்திற்கு சென்று கொண்டிருப்போம். அதுமட்டும் இல்லாமல் ஆதார் கார்டினை புதுப்பிக்கவும் நாம் பெரும்பாடு பட்டு கொண்டிருப்போம். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஆதார் கார்டு பயனாளர்களுக்கு ஒரு இலவச அறிவிப்பினை அறிவித்துள்ளது. மேலும் அது என்ன அறிவிப்பு அந்த அறிவிப்பிற்கான கடைசி தேதி என்ன என்று முழு விவரங்களையும் இன்றைய News பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்திருப்பர்வர்களுக்கு இனி இதுவும் இலவசம்…! இந்த குட் நியூஸ் எப்போ வந்துச்சு.. 

ஆதார் அட்டை புதுப்பித்தல்:

இன்றைய காலத்தை பொறுத்தவரை 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. ஆனால் இந்த ஆதார் கார்டு அனைவரிடமும் இருந்தாலும் கூட அதில் நிறைய பிழைகள் உள்ளது.

இந்த பிழைகளை ஒவ்வொன்றாக சரிசெய்வதற்குள் 1 வருடம் கூட பற்றவில்லை என்பது நிறைய நபர்களின் ஒரு பெரிய பிரச்சனை. அது மட்டும் இல்லாமல் பிழைகளை திருத்துவதற்கு என்று கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

அதுபோல இப்போது பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பானது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனை தொடர்ந்து ஆதார் கார்டினை புதிப்பித்தலும் அவசியமான ஒன்றாகும்.

ஆதார் கார்டினை புதுப்பித்தல் என்பது உடனே நடக்ககூடிய ஒரு செயல் இல்லை. அதனால் தான் மத்திய அரசு 10 வருடங்களுக்கு முன்பாக ஆதார் கார்டு பெற்று இன்று வரையிலும் புதுப்பிக்காமல் இருக்கும் அனைவருக்கும் ஒரு அறிவிப்பினை அறிவித்துள்ளது.

அது என்னவென்றால் இதுநாள் வரையிலும் ஆதார் கார்டு புதுப்பிக்காமல் இருக்கும் அனைவரும் myaadhaar.uidai.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக இலவசமாக ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த இலவச அறிவிப்பானது மார்ச் மாதம் 15-ல் தொடங்கி ஜூன் மாதம் 15-ஆம் தேதி முடிவடைகிறது. ஆகையால் ஆதார் கார்டினை புதுப்பிக்க உள்ளவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்⇒ கேஸ் மானியம் ரூ.300.. பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000..புதுச்சேரி முதலமைச்சரின் அறிவிப்பு

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil