நவம்பர் 8 தேதி காணப்படும் சந்திர கிரகணத்தை எத்தனை மணிக்கு பார்க்க வேண்டும் தெரியுமா..?

Advertisement

சந்திர கிரகணம் எத்தனை மணிக்கு 2022

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் சந்திர கிரகம் எப்போது வருகிறது எதனால் வருகிறது அதனை நாம் எப்போது பார்க்கலாம் என்றும் தெரிந்துகொள்வோம்..! பொதுவாக அனைவருக்கும் இந்த கேள்வி இருக்கும் வருடம் வருடன் சந்திர கிரகணம் சூரிய கிரகணம் என பெயர் அடிபடுகிறது. கிரகண அன்று இதை செய்யாதீர்கள் என்று நிறைய விதமான காரணங்களை சொல்லி அதிகமாக பயன் காட்டிவிடுவார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக சந்திர கிரகணம் என்றால் என்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம், அதேபோல் சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது எத்தனை மணிக்கு பார்ப்பது என்று பார்ப்போம் வாங்க..!

சந்திர கிரகணம் என்றால் என்ன?

கிரகணம் என்பது சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும் 3 எனவும் சொல்ல படுகிறது.

சந்திர கிரகணம் எப்போது – Santhira Grahanam in Tamil 2022:

கடந்த மாதம் சூரியகிரகணம் முடிவடைந்த நிலையில் அதாவது அக்டோபர் 25 தேதி முடிவடைந்த நிலையில் எதிர் வரும் நவம்பர்  முதல் வாரத்தில் சந்திர கிரகணம் நிலவும் என தெரிவித்துள்ளார்கள், அதாவது நவம்பர் மாதம் 8 தேதி நிகழ இருக்கிறது.

இதையும் படிக்கலாம் 👇
தமிழகத்தில் இன்று சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமா? எத்தனை மணிக்கு பார்க்கலாம்..!

சந்திர கிரகணம் இன்று எத்தனை மணிக்கு 2022 – Chandra Grahan Date and Time 2022 

 நவம்பர் மாதம் 8 தேதி பிற்பகல் 2:48 PM தொடங்கி சந்திர கிரகணம் மாலை 6:19 PM வரை காணப்படும் என்றும் அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள். முக்கியமாக சூரியகிரகணத்தை பார்க்க கருவிகள் உள்ளது அதனை வைத்து சரியாக சூரியகிரகத்தை பார்த்து ரசித்து இருக்கிறோம், ஆனால் சந்திரககிரணத்தை பார்க்க கருவிகள் இல்லை என்பதும் முக்கியமானது ஆகும். 

சில வருடம் 3 கிரகணம் கூட ஏற்படும் ஆனால் இந்த வருடம். 2 சந்திர கிரகம் ஏற்படுகிறது ஒன்று முடிந்த நிலையில் கடந்த மாதம் சூரியகிரகம் முடிந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் 8 தேதி 35 நாட்களுக்குள் நிகழும் முழு சந்திர கிரகணம் என்று சொல்லப்படுகிறது.

சந்திர கிரகணம் 2022 இந்தியாவில்:

இந்தியாவிலும் இந்த சந்திர கிரணத்தை நம்மால் பார்க்க முடியும். குறிப்பாக கடந்த முறை சூரிய கிரகணம் குறைவான நேரம் தென்பட்ட மேற்கு வங்கம் போன்ற கிழக்கு இந்திய பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடியும். மற்ற பகுதிகளில் இது கிரகணம் பகுதி சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இந்த ஆண்டி கடத்தி சந்திர கிரகணம் இதுவாகும்.

அதேசமயம் மற்ற நாடுகளிலும் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். அதாவது ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபில் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளிலும் பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்..!

சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா?

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News
Advertisement