மே 5 இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. இந்த கிரகணத்தை எங்கு எப்படி பார்க்கலாம் முழு விவரம் இதோ..!

chandra grahan 5 may 2023 in india date and time

மே 5 இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. இந்த கிரகணத்தை எங்கு எப்படி பார்க்கலாம் முழு விவரம் இதோ..! Chandra Grahan 5 May 2023 in India Date and Time..!

வணக்கம் நண்பர்களே.. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகின்ற மே மாதம் 5-ஆம் தேதி அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகத்தை இந்தியாவில் பார்க்க முடியுமா? இந்த கிரகணத்தை நாம் எங்கெல்லாம் பார்க்க முடியும், சந்திர கிரகணம் சரியாக எந்த நேரத்தில் இருந்து எந்த நேரம் வரை நிகழ உள்ளது. சந்திர கிரகணம் எத்தனை மணி நேரம் நிகழும் போன்ற முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் இந்த பதிவின் மூலம் முழுமையாக படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சந்திர கிரகணம்:

இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம், பகுதி நேர சந்திர கிரகணம் என்று சொல்லலாம். இந்த கிரகணம் உலகின் பெரும்பாலான இடங்களில் காணப்படும் என்று கூறப்படுகிறது, குறிப்பாக இந்த கிரகணம் சுமார் 4 மணி நேரம் நிகழ இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபிஸில் PPF கணக்கு வைத்திருக்கிறீர்களா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!

சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்? – Chandra Grahan 5 May 2023 in India Date and TimeChandra Grahan 5 May 2023 in India Date and Time

இந்த சந்திர கிரகணம் உலகில் உள்ள 7 கண்டங்களில் 5 கண்டங்களில் நன்றாக பார்க்க முடியும். அதாவது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் பார்க்க முடியும். இருப்பினும் இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது.

சந்திர கிரகணம் எத்தனை மணிக்கு வானில் பார்க்கலாம்?

  • இந்த பகுதி சந்திர கிரகணத்தை உலக நேரப்படி மே மாதம் 5-ம் தேதி மாலை 3.14 மணிக்கு தொடங்கி 7.31 மணி வரை தெரியும்.
  • இந்திய நேரப்படி இந்த பகுதி நேர சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது.
  • இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும்.
  • இந்த கிரகணம் மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடைகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிலிண்டரின் விலை அதிரடியாக 171 ரூபாய் குறைவு..! மகிழ்ச்சியில் மக்கள்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil