பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்..! Chennai University Free Education Program 2022
Chennai University Free Education Program 2022:- ஹாய் பிரண்ட்ஸ் பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் தகவலை பற்றித்தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த இலவச கல்வி திட்டத்தில் யாரெல்லாம் பொன்பெறலாம். இதற்கான இதற்கான தகுதி என்ன? என்ன தேதியில் இருந்து மாணவர்கள் இந்த இலவச கல்வி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் போன்ற முழுமையான தகவல்களை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.
பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம்!
12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
அந்த வகையில் இந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் ஆன்லைன் மூலம் http://unom.ac.in என்ற இணையத்தில் உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு இலவசமாக இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |