Chrome Firefox & Other Web Browsers Update News
ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..? அது என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்களிடம் Smart Phone இருக்கிறதா..? நான் கேட்கும் கேள்வி தவறு என்று நினைக்கிறேன். ஏனென்றால் இன்றைய நவீன உலகம் Smart Phone உலகமாக மாறிவிட்டது. யாரை பார்த்தாலும் ஸ்மார்ட் போன் கையில் இல்லாமல் இருக்கவே இருக்காது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே Smart Phone பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வளவு ஏன் உலகமே உள்ளங்கையில் தான் என்ற வார்த்தையே ஸ்மார்ட் போன் வந்த பின் தான் வந்தது. சரி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் நல்ல விஷயமும் இருக்கிறது, கெட்ட விஷயமும் இருக்கிறது. இரண்டுமே நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து மாறும். சரி அதை விடுங்க. உங்கள் போனில் Chrome, Firefox இந்த மாதிரி Web Browsers உள்ளதா..? அப்போ இந்த விஷயம் தெரியாமல் இருந்தால் எப்படி..? வாங்க அது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chrome Firefox யூசர்ஸ் உடனே செய்ய வேண்டியவை:
Chrome, Firefox, Edge மற்றும் Brave போன்ற Web Browsers பயன்படுத்தும் யூசர்கள் உடனடியாக இவற்றை அப்டேட் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது Chrome, Firefox, Edge மற்றும் Brave போன்ற Web Browser -களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இதுபோன்ற Web Browser -களை பயன்படுத்துகின்ற யூசர்கள் உடனடியாக அவர்கள் போனில் இருக்கும் Browser- களை Update செய்ய வேண்டும் என்று நிறுவனங்கள் தங்கள் யூசர்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இதற்கு என்ன காரணம் என்றால், ஹேக்கர்ஸ் பயனர்களின் கம்ப்யூட்டர்களை எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஜியோ பயனாளர்களுக்கு 219 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 7 ஜிபி டேட்டா எக்ஸ்ட்ரா கிடைக்குது..
இதனால் ஹேக்கர்ஸ் டார்கெட் செய்த பயனர்களின் சிஸ்டங்களில் ரிமோட் Access -யை பெற்று, வைரஸ் Code -களை அனுப்புவதன் மூலம் சிஸ்டத்தில் சேமித்து வைத்துள்ள ரகசிய தகவல்களை சேகரித்து வருகின்றன.
இந்த பிரச்சனை பல நிறுவனங்களுக்கு பெரும் வருத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக Google, Mozilla மற்றும் Microsoft போன்ற நிறுவனங்கள் Browser Update -களை ஏற்கனவே வெளியிட தொடங்கியுள்ளன.
இதற்கிடையில் நீங்கள் பயன்படுத்தி வரும் Web Browser பாதுகாப்பான Version ஆ என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்களை கீழே காணலாம்.
299 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானில் ஏர்டெல் வழங்கும் அதிரடியான ஆஃபர்..! மிஸ் பண்ணிடத்தக்கூடாது
பாதுகாப்பான Version -ஐ கண்டறிவது எப்படி..?
- Mac மற்றும் Linux பயனர்களுக்கு Google Chrome Version 116.0.5846.187.
- Windows பயனர்களுக்கு Google Chrome version 116.0.5845.188.
- Firefox version 117.0.1
- Firefox ESR 102.15.1
- Firefox ESR 115.2.1
- Edge version 116.0.1938.81
உங்கள் System மேல் வலது மூலையில் மூன்று புள்ளிகள் கொண்ட Menu -யை கிளிக் செய்ய வேண்டும். அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் PC-யின் Browser வெர்ஷனை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
Apple நிறுவனமும் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு iOS 16.6.1 மற்றும் iPadOS 16.6.1 போன்ற Update வெர்ஷனை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த பாதுகாப்பு எச்சரிக்கை Web Browser -களுக்கு மட்டுமல்லாமல் Signal, Telegram, LibreOffice, Gimp போன்ற Massaging Application -களுக்கும் பெறப்பட்டு வருகிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |