திடீரென்று குறைந்த சிலிண்டர் விலை.! எவ்வளவு தெரியுமா.?

Advertisement

Commercial Cooking Gas Cylinder Price in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் சமையல் செய்வதற்கு அடுப்பை தான் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் சமைப்பதற்கு கேஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பு, மைக்ரோவேவன் என்று என்று பல இருக்கிறது. இதில் அனைவரும் வீட்டில் கேஸ் பயன்பாடு இருக்கிறது. கேஸ் இல்லாத வீடுகளே இல்லை. நமது சமையலை சீக்கிரம் முடிப்பதற்கு உதவியாக இருக்கிறது. கேஸ் பயன்படுத்துவதற்கு முக்கியமாக இருப்பது சிலிண்டர் தான். இதன் விலையானது ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. இந்த பதிவில் வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அவை எவ்வளவு குறைந்துள்ளது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது:

வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலையானது ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படுகிறது. இதன் விலையானது மாதந்தோறும் மாறுபடும்.

சர்வதேச சந்தையில்  நிலவும் கச்சா எண்ணையின் விலைக்கு ஏற்றவாறு மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கும். இந்த நிலையில் தற்போது வணிக சிலிண்டரின் விலையானது அதிகரித்துள்ளது.

வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது

இந்த மாதம் முதல் நாள் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டு  1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 15 நாட்களுக்கு பிறகு இதன் விலை குறைந்துள்ளது.

இந்த நிலையில் ரூ.1999.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த வணிக கேஸ் சிலிண்டரின் விலையானது இன்று  57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அட்டகாசமான BSNL ரீச்சார்ஜ் திட்டம் அதுவும் வெறும் 48 ரூபாயில் கேட்கவே எப்படி இருக்கு..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement