சிலிண்டரின் விலை அதிரடியாக 171 ரூபாய் குறைவு..! மகிழ்ச்சியில் மக்கள்..!

Commercial Gas Cylinder Price 19kg in Chennai

Commercial Gas Cylinder Price 19kg in Chennai

பொதுவாக நாம் சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் சரி அதில் மாதாந்திர செலவிற்கு என்று குறிப்பிட்ட பணத்தினை எடுத்து வைத்து விடுவோம். ஏனென்றால் அடிப்படை செலவு என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்கும். அத்தகைய செலவினை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அனைவரும் தேவைக்கேற்ற பணத்தினை மாதந்தோறும் சம்பாதிக்கும் பணத்தில் எடுத்து வைத்து விடுவார்கள். அந்த வகையில் அனைவருடைய வீட்டிலும் முதலில் சமைப்பதற்கு தேவையான சிலிண்டரினை வாங்க வேண்டும் என்று தான் திட்டமிடுகிறார்கள். நாம் சமையலுக்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் விலையானது சில ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்படும். அந்த வகையில் பார்த்தோம் என்றால் இப்போது சென்னையில் சிலிண்டரின் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சென்னையில் சிலிண்டரின் விலை எவ்வளவு விலை குறைந்து இருக்கிறது. இதன் மூலம் யார் யாரெல்லாம் பயன்பெறலாம் என்று முழுத்தகவலினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிலிண்டர் விலை குறைப்பு:

தினமும் சமைப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் நாம் தினமும் சாப்பிட்டால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் அனைவருடைய வீட்டில் மற்றும் ஹோட்டலில் சிலிண்டர் தான் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு நாம் பயன்படுத்தும் சிலிண்டரின் விலையானது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஏனென்றால் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் இவற்றில் எதுவாக இருந்தாலும் அதனுடைய விலையினை நிர்ணயிப்பது கச்சா எண்ணெய் நிறுவனம் தான்.

அதுபோல சர்வதேச சந்தையில் காணப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து தான் சிலிண்டரின் விலை, டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விலையானது காணப்டுகிறது.

 அந்த வகையில் இன்று சென்னையில் பயன்படுத்தும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையானது குறைந்து உள்ளது. அதாவது வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் 19 கிலோ அளவிலான சிலிண்டரின் விலையானது 171 ரூபாய் குறைந்து 2.021.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று கச்சா எண்ணெய் நிறுவனம் ஆனது அறிவித்துள்ளது. 

மேலும் வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

இத்தகைய சிலிண்டர் விலை குறைவு அறிவிப்பானது சென்னை மக்களிடையே மகிழ்ச்சியினை அளித்துள்ளது.

 இதையும் படியுங்கள்👇👇 பெண் ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு.. துணை ஆளுநர் அறிவிப்பு..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil