Corning Gorilla Glass Tamil Nadu
உலகில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலட்ரிக் பொருட்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதுமட்டுமில்லமால் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள்ஏற்றுமதியிலும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 3 நிறுவனங்களும் சென்னையில் இருக்கும் வேளையில், இந்த நிறுவனங்களுக்குத் துணையாக ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் டிஸ்பிளே கிளாஸ் தயாரிக்கும் அமெரிக்காவின் பிரபலமான Corning Inc சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. இதனை பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தமிழ்நாட்டில் கொரில்லா கிளாஸ் எங்கு அமைப்படவுள்ளது:
ஸ்மார்ட்போன் கொரில்லா கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான கார்னிங், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. அமெரிக்க கண்ணாடி தயாரிப்பாளரும், ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சப்ளையர்களில் ஒருவரும் இணைந்து , சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும். ஒரு புதிய தொழிற்சாலையைத் திறந்து 300 பேர் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் இந்த கார்னிங் புதிய தொழிற்சாலையை தெலுங்கானாவில் அமைப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது எலக்ட்ரிக் பொருட்களின் ஏற்றம் காரணமாக நிறுவனமானது தமிழ்நாட்டை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகவுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர் சந்திப்பில் (ஜிஐஎம்) தமிழக அரசுடன் முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஐபோன் உதிரிபாகங்கள் மற்றும் ஆப்பிள் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், எதிர்காலத்தில் ஸ்மார்ட்போனின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலமாக , எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எக்ஸ் கார்னிங்கில், வருடத்திற்கு இந்தியாவில் 30 மில்லியன் துண்டுகள் கொண்ட டிஸ்ப்ளே ஃபினிஷிங் தயாரிக்கப்படும் என்று கூறிவுள்ளார்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |