நீங்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களா? கட்டாயம் படிங்க..!

2 dose awareness in tamil

மூன்றாம் தவணை தடுப்பூசி தேவையா?

coronavirus dose: தற்போது கொரோனா நோயானது குறைந்து வந்த நிலையில் இப்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது மூன்றாம் அலையான ஓமிக்ரோன் என்ற கொடிய தொற்றுநோய். இந்த நிலையில் நாம் அனைவரும் கட்டாயமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தாமாக முன்வந்து 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றால் இந்த பதிவினை கட்டாயமாக படியுங்கள்..

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு:

2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உடலில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் 97% வரை உயிரிழப்பை தடுக்கலாம் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக தமிழக அரசானது கோவிஷீல்டு (Covishield), கோவாக்சின் (Covaccine) ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் தான் கொரோனா தொற்றிலிருந்து நம்மை முழுமையாக பாதுகாக்கிறது.

வகைகள்:

கொரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக போடப்படுகிறது. இதுவரை நாட்டில் 73,05,89,688 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திய பிறகு:

ஒருவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நோயின் தாக்கம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

மூன்றாம் அலை ஓமிக்ரோன் பரவல்:

தற்போது கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் மூன்றாம் அலைக்காக அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கை மூன்றாம் அலையின் அறிகுறி என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர் நோய் முழுமையாக குணமடைந்து 3 மாதங்களுக்கு பிறகே கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அவர்கள் 96.6% நோய்த்தொற்று உயிரிழப்பில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

3-ம் அலை:

உருமாறிய கொரோனா இந்தியாவின் பல மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பானது வரும் நாட்களில் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள தரவுகள் மற்றும் கடந்த கால அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது ஓமிக்ரான் வேகமாகப் பரவி, அதிக மக்களைப் பாதிக்கும் எனத் தெரிகிறது.

இந்திய நாடானது மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் 3-ம் அலையானது நாட்டிற்கே பின்னடைவு தான். நாம் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாட்டில் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

வேக்சின் கட்டாயம் போட்டுக்கொள்ளுங்கள்:

நமது இந்திய நாட்டில் இதுவரை 125 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா வேக்சின்கள் ஒருவருக்கு தீவிரமான கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். எனவே, நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தயக்கம் காட்டாமல் வேக்சின் போட்டுக்கொள்வதன் மூலம், 3-ம் அலையான ஓமிக்ரான் தாக்கத்தை நிச்சயமாகத் தடுக்க முடியும்.

மூன்றாம் தவணை தடுப்பூசி தேவையா?

கொரோனா நோய் தொற்று காலத்தில் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இதுவரை வேக்சின் போடாதவர்களும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்குக் கூடுதல் டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை:

ஓமிக்ரான் கொரோனா தொற்றானது லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. ஆனால், அது டெல்டா கொரோனாவை காட்டிலும் 10 மடங்கு வேகமாகப் பரவும் திறனைக் கொண்டிருக்கலாம்.

இருப்பினும், தேவையில்லாத வெளி பயணங்கள், குறிப்பாகச் சுற்றுலா மற்றும் பொது இடங்களில் எல்லோரும் ஒன்றாக கூடுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.  அனைத்து பொது போக்குவரத்துக்கும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சிறுவர்களுக்கு வேக்சின் கட்டாயம் செலுத்த வேண்டும்:

ஓமிக்ரான் பரவிய ஆப்பிரிக்க நாடுகளில் சிறார்கள் மத்தியில் வைரஸ் தொற்றானது மிகவும் அதிகரித்துள்ளது. சிறுவர்களை ICU வார்டுகளில் சேர்க்கப்படுவதும் அதிகரித்துள்ளது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள 18 வயதைக் கடந்த அனைவரும் வேக்சின் போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே நோய் தொற்றிலிருந்து அனைவரும் தப்பிக்க தாமாக முன்வந்து 2 டோஸ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ளுங்கள்..

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com