கிரெடிட் கார்டு வரி
நம் முன்னோர்கள் காலம் மாதிரி இன்றைய காலம் இல்லை. தொழிநுட்பம் வளர வளர மக்களும் மாறி வருகின்றனர். அதிலும் முக்கியமாக வங்கி கணக்கு, ஸ்மார்ட் போன், கிரெடிட் கார்டு இல்லாமல் யாரும் இருப்பதில்லை. அது போல வெளியில் சென்றால் யாரும் பர்ஸை எடுத்து கொண்டு போவதில்லை, பர்ஸை எடுத்து போனாலும் அதில் பணம் உள்ளதா என்று யாரும் பார்ப்பதில்லை. இதற்கு மாறாக ATM கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இருக்கிறதா என்று தான் பார்க்கின்றனர். ஆதலால் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறவர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அது என்னவென்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இந்தியர்கள் வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 20% வரி அறிவிப்பு:
இந்தியர்கள் இந்தியாவில் உள்ள கிரெடிட் கார்டை வெளிநாட்டில் பயன்படுத்தினால் 5% வரி வசூலிக்கப்பட்டது. இந்த வரியில் மத்திய அரசு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்தியர்கள் இந்தியாவில் உள்ள வங்கிகள் மூலம் பெறப்பட்ட கிரெடிட் கார்டை வெளிநாட்டில் பயன்படுத்தினால் 20% வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த வரி பிடித்தம் வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சையை தவிர மற்ற செலவுகளுக்கு கிரெடிட் கார்டு வரி பிடித்தம் செய்யப்படும்.
ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திப்பருப்பவர்கள் இருக்கின்ற பிரச்சனையில் 20% வரி பிடித்தம் என்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா.. அப்போ இனி ஜாலி தான்..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |