Credit Card TCS Rate Increase in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா..? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். பொதுவாக இன்றைய நிலையில் பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது நிதி மசோதா, 2023-24 பட்ஜெட்டின் மூலம் பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் TCS வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை குறித்து விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!
கிரெடிட் கார்டு பயன்படுத்தி வரும் நபர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வர போகிறது. இது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது என்னெவென்றால், 2023 பட்ஜெட்டின் படி பணம் அனுப்புதல் திட்டத்தின் (LRS) கீழ் TCS வரி விகிதமானது 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களில் தற்போது 5 சதவீதமாக இருக்கும் TCS வரி கட்டணத்தை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
👉ரயில் பயணிகள் கவனத்திற்கு.. உங்களுக்கு தாங்க இந்த நியூஸ் இன்னும் தெரியாதா
உதாரணத்திற்கு நீங்கள் ஏதாவது வெளிநாட்டு சுற்றுலாவை புக்கிங் செய்து, அதற்காக 1 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால், அதற்கு 20,000 ரூபாய் TCS வரி செலுத்த வேண்டும்.
அதுபோல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனையை LRS திட்டத்தின் கீழ் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கியிடம் நிதித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் காரணமாக யாரும் இந்த வரியிலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ இனி இவர்களுக்கு எல்லாம் ரயில் கட்டணத்தில் தள்ளுபடியாம் தெரியுமா..
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் அது LRS திட்டத்தின் கீழ் வருவதில்லை. அதனால் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை LRS திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதன் காரணமாக நீங்கள், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணத்தை மாற்றினாலோ அல்லது டெபிட் கார்டு மூலம் வெளிநாட்டுப் பயணத்தை முன்பதிவு செய்தாலோ அது LRS திட்டத்தின் கீழ் வரும். அதனால் நாம் வரி செலுத்தி தான் ஆக வேண்டும்.
இதையும் படியுங்கள்👇👇
வருகிறது ரேஷன் கடைகளில் மாற்றம்.. மக்களுக்கு தான் அடிக்கிறது லக்..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |