ரெப்போ வட்டி விகிதம்
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல கடன்களை அளிக்கின்றன. இந்த கடன்களால் பலரும் பயன் அடைந்து வருகின்றனர். வங்கிகளில் கடனை பெற்ற பிறகு சரியாக EMI செலுத்தினால் மட்டும் போதாது. அந்த கடன்களுக்கான வட்டி உயருகிறதா.! குறைகிறதா என்று அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன.?
ஒரு நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம். இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் தலைமை இடமாக இருப்பது ரிசர்வ் வங்கி உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் ஏறும் போது வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு EMI செலுத்துபவர்களின் வட்டி விகிதமும் உயரும்.ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பு:
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையின் திட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வந்த நிலையில் தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்ற அறிவிப்பை அறிவித்திருக்கிறது.
இதனால் வீட்டு கடன், வாகன கடன் போன்ற வங்கி கடன்களை பெற்று EMI செலுத்துபவர்களுக்கும் நற்செய்தியாக இருக்கிறது. கடந்த மே மாதம் நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி 2.50% வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதனால் வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கும் வட்டி தொகை அதிகரித்தது. ஆனால் இம்முறை வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் 6.5% வட்டியை வைத்திருக்கிறது.
நாட்டின் பண வீக்கம் விகிதம் 6.52% இருந்து ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. இதனால் 2023 முதல் 2024 ஆண்டு வரை நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5% இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது. அதனால் தான் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் வட்டி உயர்வு நடவடிக்கை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி தயராக உள்ளதாக ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கனரா வங்கியில் 8.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால்EMI எவ்வளவு தெரியுமா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |