Customer Phone Number Providing Service Not for Retailer
பொதுவாக நாம் அனைவருக்கும் அன்றாட தேவைகள் என்பது இருக்கும். இத்தகைய தேவைகள் அனைத்தினையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கு பணம் தான் அடிப்படையான ஒன்று. இவ்வாறு இருக்கையில் சிலர் அவர்களிடம் பணம் இருக்கும் அளவினை பொறுத்து மாதாந்திர மளிகை சாமான்களை வாங்கி கொள்வார்கள். காய்கறி மற்றும் பால் இவற்றை மட்டும் தினம்தோறும் வாங்கி கொள்வார்கள். மற்ற சிலர் தினம்தோறும் தேவைப்படும் பொருட்களை மட்டும் கையில் பணம் இருப்பதை பொறுத்து வாங்கி கொள்வார்கள். ஆனால் நாம் வாங்கும் முறை என்பது இரண்டு விதமாக இருந்தாலும் கூட அதற்கான பில் போடும் முறை என்பது ஒன்றாக இருக்கிறது. இதுநாள் வரையிலும் நாம் வாங்கும் பொருட்களுக்கு பில் போடும் முறையில் சில மாற்றங்களை மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. அதனால் இன்று அத்தகைய அறிவிப்பு என்ன என்பது பற்றிய முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இனி கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு மொபைல் நம்பர் தேவையில்லை:
நாம் அனைவரும் நம்முடைய வீட்டிற்கு தேவைப்படும் பொருட்களின் அளவினை பொறுத்தே அதற்கு ஏற்றவாறு வாங்கி கொள்வோம். அதேபோல் நாம் வாங்கும் பொருட்களின் விலையும் சில கடைகளில் விற்கப்படும் விலையினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
ஆனால் பெரும்பாலான கடைகளில் நாம் பொருட்கள் அனைத்தும் வாங்கிய பிறகு பில் போடும் போது நம்முடைய தொலைபேசி எண்ணை கேட்பார்கள். மற்ற சில கடைகளில் தொலைபேசி எண் இருந்தால் தான் பொருட்களுக்கு பில் போட முடியும் என்ற விதிமுறையும் இருக்கிறது.
இவ்வாறு வாடிக்கையாளர்கள் அனைவரும் தொலைபேசி எண்ணை கடைகளில் கொடுப்பதால் சில தவறுதலான மோசடிகளும் நடப்பதாக மக்களிடையே சில கருத்துக்கள் எழுந்துள்ளது.
ஏனென்றால் மொபைல் நம்பர் என்பது ஒருவரின் தனிப்பட்ட வசதி என்பதால் அதனை மற்றவர்கள் தவறான முறையில் பயன்படுத்துவது தவறு. இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம், சில்லரை வியாபாரிகளுக்கு என்று ஒரு புதிய உத்தரவை கூறியிருக்கிறது.
இதனை பற்றி டெல்லியில் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சர் ரோகித் குமார் சிங் கூறுகையில் வாடிக்கையாளர்களிடம் வாங்கும் மொபைல் எண்ணிற்கு அந்த கடையில் உள்ள சலுகைகள், புதிய பொருட்களின் அறிமுகம் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் SMS மூலமாக அனுப்பப்படுகிறது.
இவற்றை எல்லாம் இனி நடக்காமல் இருப்பதற்கு கடைகளில் பில் போடும் முன்பாக வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண்ணை கேட்டு அவர்கள் கொடுக்கவில்லை என்றால் ரீடெயில் வியாபாரிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பு மொபைல் எண்ணை கடைகளில் கொடுக்க தயக்கம் கொள்ளும் பெரும்பலான நபர்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Latest News👇👇 சமையல் எண்ணெயின் விலை இவ்வளவு குறைந்து விட்டதா..காரணம் என்ன தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |