DA Latest News in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் முக்கியமான ஒரு தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அப்படி என்ன தகவல் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள்..? சிந்தனை செய்துகொண்டே இந்த பதிவினை தொடர்ந்து படித்து அது என்ன தகவல் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
DA Latest News for Central Government Employees in Tamil:
பொதுவாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 7-வது சம்பள கமிஷனின் மூலமாக தான் ஊதியம் வழங்கப்படுகின்றது. இந்த கமிஷன் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அளவீட்டை தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்த அதிரடி உத்தரவு
விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA வழங்கப்படுகிறது. Cost of Living ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிகரிக்கிறது மற்றும் CPI-IW மூலம் அதைக் கணக்கிட்டு அறிவிக்கப்படுகிறது. இந்தக் கொடுப்பனவு ஒரு வருடத்திற்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது.
அந்த வகையில் நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் தாக்கத்துடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA உயர்த்துவதற்கான திட்டத்தை உருவாக்கி ஜனவரி 1, 2023 அன்று அமல்படுத்தியது.
இந்த திட்டத்தில் 38% அகவிலைப்படி (DA) தற்போதுள்ள 4% உயர்த்தப்பட்டு 42% வழங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.மேலும் இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தின் மீதான ஒட்டு மொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூபாய் 12,815,60 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அரசு அறிவித்த 1000 தொகை செப்- 15 முதல் வழங்கப்படும் யாருக்கு உண்டு யாருக்கு இல்லை
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |