நெல் அறுவடை
இன்றைய காலத்தை பொறுத்தவரை பெரும்பாலான நபர்கள் தனியார் துறை மற்றும் அரசு துறையில் தான் வேலைக்கு செல்கிறார்கள். அதிகமாக யாரும் விவசாயம் செய்வது இல்லை. அப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும் கூட அதற்கான செயல் முறையினை கண்டு யோசிக்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு நெல் நிலத்தில் விதைத்த காலம் முதல் அத்தகைய நெல் அறுவடை செய்வது வரை நிறைய வேலை இதற்கு இடையில் உள்ளது. இவற்றை எல்லாம் கடந்து அறுவடை செய்து முடித்தாலும் கூட அதனை விற்பனை செய்து வருமானம் பெறுவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. ஏனென்றால் அனைத்து ஊரிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லை. ஆகையால் இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசானது விவசாய மக்கள் நலன் கருதி ஒரு நற்செய்தியினை அறிவித்துள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பை பற்றி தெளிவாகவும் மற்றும் விரிவாகவும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை இனி அரசு பள்ளி மாணர்வகளுக்கும் கிடைக்கபோகுதாம்.. தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ்..
நேரடி நெல் கொள்முதல் நிலையம்:
நெல் அறுவடை செய்வது என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட அதில் நிறைய வகையான நெல் வகைகள் உள்ளது. அவ்வாறு இருப்பதில் விவசாயிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியான நெல் விதிகளை வாங்கி பயிர் செய்கின்றனர்.
அதுபோல நெல்லின் வகையினை பொறுத்து தான் அறுவடை காலம் முதல் விற்பனை செய்யும் விலை என அனைத்தும் மாறுபடும்.
நெல்லினை அறுவடை செய்வதை விட அதனை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது தான் மிகவும் சாத்தியமற்ற ஒரு செயல். ஏனென்றால் அனைத்து ஊரிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லாமல் இருப்பதால் அடுத்தடுத்த ஊருக்கு சென்று நெல்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
அதனால் தான் இவற்றை எல்லாம் மையமாக வைத்து தமிழக அரசானது ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் விவாசயிகள் மக்கள் நலப்பிரதிநிதி எந்த இடத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கூறினாலும் திறக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் மொத்தமாக 3250 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுபோல அந்தந்த நிலத்திற்கு உள்ள சிற்றாடங்கள் மூலம் நெல் விற்பனை செய்வதன் மூலம் எந்த விதமான குழப்பம் மற்றும் தவறும் நடக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய செய்தியானது விவசாய மக்களிடம் ஒரு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ் என்னனு தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |