தமிழக பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ரூ.1000 வாங்கும் பெண்களுக்கு இந்த மாதம் செம தீபாவளி பரிசு காத்திருக்கு.. Diwali Special News in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தமிழக பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லலாம்.. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்தார். அதன்படி தமிழக பெண்களுக்கு போன மாதம் செப்டம்பரில் இருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தமிழக பெண்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.1000 வாங்கும் பெண்களுக்கு இந்த மாதம் செம தீபாவளி பரிசு காத்திருக்கு.. அது என்ன என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முன் கூட்டியே கலைஞர் மகளிர் உரிமை தொகை?
அதாவது இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியேகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் 15-ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையை முன் கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்துகொண்டு வருகிறது.
மாதம் தோறும் 15 தேதி ஞாயிற்று கிழமை வந்தால் முன்கூட்டியே அதாவது 14-ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்தை சுற்றி பார்க்கலாம்… அதிரடி அறிவிப்பு!!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |