தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Diwali Special Train for Tambaram to Nagercoil

தெற்கு ரயில்வே தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க அறிவிப்பு – Diwali Special Train for Tambaram to Nagercoil

தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றன. குறிப்பாக பெரிய பெரிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் தினந்தோறும் கூட்டமாக தான் இருக்கும், அந்தவகையில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வேற இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. பெரும்பாலான மக்கள் வெளியிடங்களில் பணிபுரிகின்றன ஆக அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். இதனால் ரயில் நிலையம் இன்னும் அதிக கூட்ட நெரிசலுடன் காணப்படும். ஆக இந்த தீபாவளி பண்டிகைக்காக தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு. ஆக அதனுடைய நேரம் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் இயங்கும் நேரம்:

வண்டி எண் இயங்கும் நாட்கள் புறப்படும் நேரம் வந்தடையும் நேரம்
இந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06012/11) நவம்பர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகள் இயங்கும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படும் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

 

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் இயங்கும் நேரம்:

வண்டி எண் இயங்கும் நாட்கள் புறப்படும் நேரம் வந்தடையும் நேரம்
இந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06012/11) நவம்பர் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகள் இயங்கும் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்

 

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 2-ம் தேதி முதல் காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

பாலக்காடு மண்டலத்தில் கடவுப் பாதை குறுக்கே சாலை மேம்பால பணி நடப்பதால் சென்னை சென்ட்ரல் – மங்களூருவெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் (வண்டி எண்.22637) நவம்பர் 2, 3, 5, 6மற்றும் 8 ஆகிய தேதிகளில் தாமதமாக இயக்கப்படும்.

இதன்படி, இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.25 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 3 மணி நேரம் தாமதமாக மாலை 4.25 மணிக்குப் புறப்படும்.

மறுபடியும், இந்த ரயில் (22638) நவம்பர் 2, 3, 4, 6, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மங்களூருவில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 2.50 மணி நேரம் காலதாமதமாக அதிகாலை 2.35 மணிக்குப் புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருச்சி to சென்னை ரயில் நேரம் அட்டவணை..!
தினமும் சென்னை முதல் கும்பகோணம் வரை செல்லும் ரயில் நேரம் விவரங்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil