காய்ச்சலுக்கு இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க!

Do not take these tablets for fever

காய்ச்சலுக்கு இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க! Do not take these tablets for fever

தற்பொழுது குளிர் காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பித்து வரும் நிலையில் நாடு முழுவது பெரும்பாலோனோருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலோனோர் மருத்துவமனைக்கு சென்று வருகின்றன, மேலும் பலர் மெடிக்கல் ஷாப்பில் மருந்துகளை பாதிப்புகளை கூறி தானாகவே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றன. இவற்றை முன்னிட்டு IMA என அழைக்கப்படும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு ஒரு அறிக்கையை அறிவித்துள்ளது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

மருத்துவ சங்கம் எச்சரிக்கை – Do not take these tablets for fever:

IMA என அழைக்கப்படும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ள அறிக்கை படி. நாட்டில் H3N2 என்று அழைக்கப்படும் வைரஸ் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த வைரசால் தான் பெரும்பாலோனோருக்கு காய்ச்சல், சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகள் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

வைரஸ் காச்சலில் 5 முதல் 7 நாட்கள் காய்ச்சல் சரியானாலும் மூன்று வாரங்கள் வரை இருமல் தொகை தொடரும் வாய்ப்புகள் அதிகம்.

50 வயது மேற்பட்டவர்களையும், 15 வயது கீழானவரையும் இந்த வைரஸ் எளிதில் தாக்குகிறது.

பொதுவாக வயிற்று போக்கு, சிறுநீரக தொற்றுக்கு எடுத்துக்கொள்ளும் Antibiotic Tablets காய்ச்சலுக்கு அதிகளவு பரிந்துரைக்கப்படுகிறது. வைரஸ் காய்ச்சலை சரி செய்வதில் பயன்தராத Antibiotic Tablets, Antibiotic Resistance-ஐ ஏற்படுத்துவதால் Antibiotic Tablets தேவைப்படும் தொற்று தாக்கும்போது உடல் அந்த மருந்தை ஏற்காமல் போகும் நிலை ஏற்பட்டு, இக்கட்டான சூழல் உருவாகும்.

கோவிட் காலத்திலும் இதே தவறு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள மருத்துவ சங்கம் கூட்டமான இடங்களை தவிர்ப்பது, கைகளை சுத்தமாக கழுவது, மற்றும் தேவைப்பட்டால் மாஸ்க் அணிவது இது போன்ற விஷயங்கள் சிறப்பான பயன் தரும் என அறிவித்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வங்கியில் எந்த கடன் வாங்கி இருந்தாலும் இனி வட்டி கிடையாது.! ரிசர்வ் வங்கி உத்தரவு

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil