வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முக்கியமான வங்கிகள் என்று முதல் 3 இடத்தை பிடித்த வங்கிகள் எது தெரியுமா..?

Updated On: May 29, 2023 6:58 AM
Follow Us:
domestic systemically important banks in tamil
---Advertisement---
Advertisement

Domestic Systemically Important Banks

ஹலோ நண்பர்களே..! பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரியும். அதுபோல நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் பணத்தேவை என்பது ஏற்படும். அப்படி பணத்தேவை ஏற்பட்டால் நாம் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் கேட்போம். அவர்களிடமும் பணம் இல்லையென்றால் நாம் என்ன செய்வது என்று யோசிப்போம். அப்போது நம் நினைவிற்கு வருவது வங்கி தான்.

ஆமாம் நண்பர்களே அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அதாவது வீட்டுக்கடன், வாகன கடன், வியாபார கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற பலவகையான கடன்களை வழங்கி வருகிறது. நாங்களும் இந்த பதிவில் தினமும் வங்கிகள் பற்றிய பல தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவு என்ன பதிவு என்று படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முக்கியமான 3 வங்கிகள் எது தெரியுமா..? 

 domestic systemically important banks

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகின்றது. அதுபோல வங்கிகளின் செயல்பாடுகளும், சேவைகளும் பொதுமக்களுக்கு மட்டுமன்றி நாட்டின் வளர்ச்சிக்கும், பல்வேறு இயக்கங்களும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

இதில் ஒரு சில வங்கிகள் Domestically Systematically Important Banks – (D-SIBs) அதாவது, இவை உள்நாட்டு இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான வங்கிகள் என்று சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) தெரிவித்து உள்ளது. 

அடடே இது அல்லவா அப்டேட்.. வாட்சப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் மெட்டா

D-SIBs என்று சுருக்கமாகக் கூறப்படும் இந்தப் பட்டியலில், 2015 ஆம் ஆண்டு SBI வங்கியும், 2016 ஆம் ஆண்டு ICICI வங்கியும், 2017 ஆம் ஆண்டு HDFC வங்கியும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது உள்நாட்டு அமைப்பு ரீதியாக மிகவும் முக்கியமான வங்கிகள் என்று SBI வங்கி, ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகிய வங்கிகள் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளன.

உள்நாட்டு வங்கிகள் என்பதால் D-domestic என்ற குறியீட்டோடு இவை அழைக்கப்படுகின்றன. இதுவே வெளிநாட்டு வங்கிகள், இந்தியாவில் செயல்பட்டு வந்தால், அவை G-global என்ற குறியீட்டோடு G-SIB என்று கூறப்படும்.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போறீங்களா.. அப்போ ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்களை தெரிஞ்சிக்கோங்க

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை