இனி லைசென்ஸ் எடுக்க எங்கும் அலைய தேவையில்லை..! போக்குவரத்து துறையில் அறிவித்த புது குட் நியூஸ்..!

Advertisement

Driving Licence Latest News in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள செய்திகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் லைசென்ஸ் பெற இருக்கும் அனைவருக்கும் ஒரு சூப்பரான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். இப்போது லைசென்ஸ் இல்லாமல் எந்த இடத்திற்கும் செல்ல இயலாது. அப்படி லைசென்ஸ் எடுக்க வேண்டுமானால் நாம் அலைய வேண்டியதிருக்கும். ஆனால் இப்பொழுது அந்த கவலை இல்லை. ஏனென்றால் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் போக்குவரத்து துறை, ஆர் டி ஓ ஆஃபீஸ் போகாமலே லைசென்ஸ் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகே வாருங்கள் இச்செய்தியினை விரிவாக பின்வருமாறு காணலாம்.

பான், ஆதாரை இணைக்காதவர்களுக்கு அரசு அறிவித்த அதிரடியான மற்றொரு அறிவிப்பு என்ன தெரியுமா..? தெரிலைனா உடனே இதை தெரிஞ்சுக்கோங்க..!

Driving Licence Recent News in Tamil:

Driving Licence Recent News in Tamil

 இணைய வழியில் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் வகையில் வட்டார அலுவலகத்திற்கு செல்லாமலே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம் என்று போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. 

2022 முதல் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றும் 28.02.2023 அன்று வரை மாநிலத்தில் வழங்கப்பட்ட மொத்த ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 2.67 கோடி ஆகும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

 ஆதார் அட்டையை பயன்படுத்தி விண்ணப்பத்தார்கள் வீட்டிலிருந்தோ அல்லது பிற இடங்களில் இருந்தோ பழகுநர் உரிமம் (LLR) தேர்வினை வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்திற்கு செல்லாமலே பெற்று கொள்ளலாம். 

40 வயதிற்கும் மேற்பட்ட விண்ணப்பத்தார்கள் மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்று உரிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆதார் இல்லாத விண்ணப்பதாரர், ஆவண சரிபார்ப்பு பழகுநர் உரிமம் தேர்வுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

 பழகுநர் உரிமம் பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பத்தாரர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 6 மாதங்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement