Google-க்கு போட்டியாக DuckDuckGo, அது எப்படி சாத்தியம்..

Advertisement

Google Vs DuckDuckGo

இன்று நமது உள்ளங்கையில் உலகம் சுருங்கி விட்டது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்கிறோம். அதற்கு காரணம் இணையம். நமக்கு எழும் சந்தேகங்கள் முதல் உணவு என இணையத்தில் தேடாதது எதுவும் இருக்க முடியாது. இந்த தேடுதலுக்கு நமக்கு உதவுவது Search Engine எனப்படும் தேடுபொறி. அந்த தேடுபொறிகள் எவ்வளவு உருவானாலும் Google உருவாக்கிய தேடுபொறிகளுக்கு இணையாக எந்த தேடுபொறிகளும் வந்தது இல்லை என்று தான் சொல்லவேண்டும். இதனை பயன்படுத்துவது எளிது, நாம் தேடும் அனைத்திற்கும் கண் இமைக்கும் நேரத்தில் விடை அளிக்க கூடியது. ஆனால் இது நமக்கு பாதுகாப்பானதா என்றால் சந்தேகம் தான்.

நமது தனிப்பட்ட தகவல்கள் எளிதாக மற்ற ஒருவரை சென்றடைய Google தேடுபொறி உதவுகிறது. இப்போது அனைத்தும் டிஜிட்டல் மையமாக மாறிய பின்னர் கூகுளை பாதுகாப்பற்றதாக தோன்றுகிறது. இதற்கு போட்டியாக உருவானது தான் DuckDuckGo தேடுபொறி. இந்த DuckDuckGo தேடுபொறி உள்ள சிறப்புகள் பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்ளவோம் வாருங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

DuckDuckGo உள்ள 5 சிறப்புகள்:

  1. privacy

பொதுவாக கூகுளேளில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நாம் நண்பரோடு ஆன்லைனில் ஏதேனும் ஒரு பொருளை பற்றி பேசி இருந்தால் போதும் அதனை பற்றிய விளம்பரங்கள் நமக்கு வர தொடங்கிவிடும். இதன் மூலம் நாம் அறிவது நமது தனிப்பட்ட உரையாடல்கள் கூட கூகிள் பயன்படுத்துகிறது. அதன் மூலம் நாம் உளவு பார்க்கப்படுகின்றோம் என்பது தெளிவாகிறது.

இதில் இருந்து மாறுபடுகிறது DuckDuckGo, நமது தனிப்பட்ட உரையாடல்களை அவை கவனிப்பதுதில்லை. நாம் தேடும் விஷயங்களையும் அவை சேமிப்பது இல்லை. முக்கியமாக நமது IP Address மற்றும் தமது தகவல்களை சேமிக்காது.

2.  கூகுளில் நாம் தேடும் விஷயங்களை வடிக்கட்டி நமக்கு அளிக்கும். ஆனால் DuckDuckGo அப்படியில்லை. நாம் தேடும் விஷயங்கள் தொடர்பான அனைத்தும் நமக்கு வழங்கும்.

இதன் மூலம் நமக்கு அதிகமான தகவல்களை வழங்குவது மட்டும்மல்லாமல் நமது தனிப்பட்ட தேடல்கள் காக்கப்படுகிறது.

கூகுளை வழங்கும் குறிப்பிட தளத்தை நாம் கிளிக் செய்யும் போது அவை நேரடியாக அந்த தளத்தை சென்றடையும் அப்போது நமது IP Address மற்ற ஒருவருக்கு பகிரப்படுகிறது. இதனை DuckDuckGo தடுக்கிறது. DuckDuckGo-வில் IP Address எந்த இடத்திலும் சேமிக்கப்படுவதும் இல்லை பகிரப்படுவதும் இல்லை.

3. கூகிள் உடன் ஒப்பிடும் போது DuckDuckGo குறைந்த அளவிலான விளம்பரங்களை பயன்படுத்துகிறது. google நமது தகவல்களை கொண்டு விளம்பரங்களை வெளியிடுகிறது. DuckDuckGo பொதுவான விளம்பரங்களை வெளியிடுகிறது. DuckDuckGo தேவையற்ற விளம்பரங்களை கட்டுப்படுத்துகிறது.

4. Google-லில் நாம் தேடும் அனைத்தும் History-யாக சேமிக்கபடுகிறது. அதன் மூலம் அதன் மூலம் நமக்கு அதிகபடியான தேடல் விவரங்களை தருகிறது. ஆனால் நமது History-யை சேமிப்பது இல்லை.

5. google-லை பொறுத்தவரை அதிக விளம்பரங்களை பயன்படுத்துவதால் அதன் சேவை வேகம் DuckDuckGo விட குறைகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement