குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ்…! இன்னும் இதை நீங்க தெரிஞ்சுக்கலையா..!

Advertisement

குடும்ப அட்டைதாரர்களுக்கு

தமிழகத்தில் உள்ள நபர்கள் அனைவருக்கும் நிறைய அடிப்படை ஆவணங்கள் உள்ளது. அத்தகைய ஆவணங்கள் அனைத்தும் மிகவும் முக்கியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தகைய ஆவணங்களில் ஒன்றாக குடும்ப அட்டை அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த ரேஷன் கார்டினை வைத்து தமிழக அரசு ஆனது நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை நடைமுறையும் செய்து உள்ளது. அத்தகைய திட்டங்களில் மக்கள் அனைவரும் பயனடைந்தும் வருகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசானது குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பினையும் அறிவித்துள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பு என்னவென்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழக அரசு புதிய அறிவிப்பு:

தமிழக அரசானது மக்களின் நலன் கருதி மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது.

இத்தகைய திட்டங்களை நாம் பெற வேண்டும் என்றால் அதற்கு கட்டாயமாக ரேஷன் கார்டு என்பது முக்கியமாக இருக்க வேண்டும். என்ன தான் ரேஷன் கார்டு முக்கியமான ஒன்றாக இருந்தாலும் கூட அதில் நிறைய பிழைகள் இருந்து கொண்டு தான் உள்ளது.

அதில் இதுநாள் வரையிலும் ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், முகவரி தவறுதலாக உள்ளது என நிறைய பிழைகள் இருந்து மாற்றம் செய்யாமல் அப்படியே உள்ளது.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
தமிழக அரசு அறிவித்த ஒரு நற்செய்தி இனி விவசாயிகளுக்கு பிரச்சனை இருக்காதாம் 

இவற்றை எல்லாம் சரியாக திருத்தும் செய்தி வைத்து இருந்தால் மட்டுமே நம்மால் அரசின் கீழ் அளிக்கப்படும் சலுகைகளை பெற முடியும். அந்த வகையில் இவ்வாறு இருக்கும் பிழைகளை எல்லாம் நாம் சரி செய்ய வேண்டும் அதற்கு இ-சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.

ஆகையால் தமிழக அரசானது இதனை மையமாக வைத்து கொண்டு இப்போது புதிய அறிவிப்பினை ஒன்று அறிவித்துள்ளது.

அது என்னவென்றால் ரேஷன் கடைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையம் அமைக்கப்படுவது குறித்து கூட்டுறவு துறை ஆனது ஆலோசனை செய்து வருகிறது. 

மேலும் இத்தகைய திட்டத்தின் மூலம் மக்கள் அனைவரும் இ-சேவை மையத்தில் செய்து கொள்ளும் அனைத்து விதமான பிழைகளையும் திருத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டை பொறுத்தவரை சுமார் 33,000-க்கு அதிகமான ரேஷன் கடைகள் உள்ளதாகவும் அதில் 9,708 பகுதி நேர கடையும், 24,106 முழுநேர கடையும் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வரும் ஒரு பகுதியாக காஞ்சிபும் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பின்பு மற்ற பகுதிகள் அனைத்திற்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

மேலும் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த திட்டம் முழுவதும் ரேஷன் கடையில் அமல்படுத்தப்படும் என்றும் கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்⇒ மின் வாரிய ஊழியர்களே உங்களுக்கு தான் இந்த பதிவு..  சம்பள உயர்வு யாருக்குனு தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement