E-ticket When Traveling Tamil Nadu in Tamil
நீங்கள் வெளிநாடு போனால் அங்கு பஸ் டிக்கெட் எடுப்பார்கள். அதனை வைத்து ரயில் மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்யலாம். இந்தியாவில் டெல்லியில் மட்டும் பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே ஸ்மார்ட் கார்டை வைத்து பயணிக்கலாம். இது போல் நம்முடைய தமிழ்நாட்டில் இருந்தால் என்ன என்று வெளிநாட்டுக்கு சென்றவர்கள் அனைவருமே யோசித்து இருப்பீர்கள் அல்லவா..? இனி கவலையை விடுங்க..! இனி சென்னையிலும் இந்த வசதி வரபோகிறது. அதனை பற்றிய செய்திகளை தெரிந்துகொள்வோம் வாங்க..!
E-ticket When Traveling Tamil Nadu in Tamil:
முதல் முதலாக தமிழ்நாட்டிலும், பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என மூன்று பொது போக்குவரத்திலும் போன் மூலம் இ-டிக்கெட் பெற்று பயணிக்கலாம் என்று சென்னை ஒருங்கிணைந்த பொது பெருநகர போக்குவரத்து குழுமம் நடைமுறைப்படுத்த உள்ளது.
முதல் கட்டமாக டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில், மாநகர பேருந்திலும் ஒரே இ-டிக்கெட் மூலம் பயணிக்கும் முறையையும் அடுத்த 3 மாதங்களில் தெற்கு ரயில்வேயுடன் இணைந்து ஒரே டிக்கெட் மூலம் மெட்ரோ ரயில், மின்சார ரயிலிலும் பயணிக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று பெருநகர போக்குவரத்து குழும அதிகாரி ஜெயாகுமார் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்திருப்பர்வர்களுக்கு இனி இதுவும் இலவசம் இந்த குட் நியூஸ் எப்போ வந்துச்சு
இந்த திட்டத்தை செயல்படுத்த அதிநவீன அப்ளிகேஷன் தயாரிக்கும் பணிகளில் ஒன்றிய அரசிற்கு கீழ் இயங்கும் CDAC என்ற Centre for Development of Advanced Computing நிறுவனமும் சென்னை IIT நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.
இந்த டிக்கெட் மூன்று பொது போக்குவரத்தில் எப்படி QR CODE மூலம் ஸ்கேன் செய்யும் வசதிகளையும், அதனுடைய நேரத்தையும் வடிவமைக்கபட உள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் சென்னை வாசிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்.
இந்த திட்டம் சிறப்பாக செல்லப்படும் பட்சத்தில் ஒல்லோ, உபர், ஷேர் ஆட்டோ என இது அனைத்திலும் மக்கள் இருந்த இடத்திலுருந்து பயணம் செய்யும் வசதி வரும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிவித்துள்ளது.
அரசு அறிவித்த 1000 தொகை செப்- 15 முதல் வழங்கப்படும்..! யாருக்கு உண்டு யாருக்கு இல்லை
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |