டெல்டா விவசாயிகளுக்கு 3 பேஸ் மின்சாரத்திற்கான நேரத்தை மின்வாரியம் அறிவித்துள்ளது..! எப்போ தெரியுமா..?

electric connection agriculture time for three phase in tamil

மும்முனை மின்சாரம்

விவசாயம் என்பது தலைமுறை தலைமுறையாக தொடர்ச்சியாக செய்து வரும் ஒரு பெரிய வேலையாக உள்ளது. இத்தகைய விவசாயத்தை உழவு செய்வதில் இருந்து அறுவடை செய்வது வரை என நிறைய வேலைகள் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் எந்த வகையான விவசாயம் செய்தாலும் அதற்கு தண்ணீர் கட்டாயமாக தேவைப்படும். அதிலும் சிலர் சொந்தமாக பம்புசெட் வைத்து தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்து வருகின்றனர். சிலர் இத்தகைய பம்புசெட் இல்லாத காரணத்தினால் காசு கொடுத்து தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்யும் நிலை உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக தண்ணீர் அளித்து வந்துகொண்டு உள்ளது. ஆனால் அதற்கான நேரம் பற்றி எந்த விதமான அறிவிப்பும் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் அனைவரும் இதுநாள் வரையிலும் காத்துகொண்டு இருந்தனர். அத்தகைய விவசாயிகள் அனைவருக்கும் இப்போது ஒரு குட் நியூஸ் மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன குட் நியூஸ் என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த நியூஸ் தெரியுமா..? தெரிலான உடனே தெரிஞ்சுக்கோங்க..!

மும்முனை மின்சாரம் என்றால் என்ன..?

விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தண்ணீர் தான் அடிப்படையான ஒன்று. ஆனால் இந்த தண்ணீர் என்பது குறைந்த அளவு தேவைப்பட்டால் அதற்கு ஒருமுனை மின்சக்தி மட்டும் போதும்.

 அதே ஒரு நேரத்தில் நிறைய இடங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றால் அதற்கு கட்டாயமாக அதிக அளவு மின்சாரம் தேவைப்படும். அப்போது தான் முன்முனை மின்சக்தி தேவைப்படுகிறது. இதுவே முன்முனை மின்சாரம் ஆகும்.  

Electric Connection Agriculture Time For Three Phase:

விவசாயம் என்று ஒரு வார்த்தையில் கூறினாலும் கூட அதில் நிறைய வகையான விவசாயம் உள்ளது. அதுபோல நம்முடைய விவசாயத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் அளவு மற்றும் உரம் போன்றவற்றை தேவைப்படுகிறது.

அதேபோல நாம் செய்யும் விவசாயத்தை பொறுத்து தான் அறுவடை செய்யும் நேரமும் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு இலவசமாக பயன்படும் வகையில் முன்முனை மின்சாரம் வழங்குகிறது.

ஆனால் அத்தகைய முன்முனை மின்சாரம் முறையினையும் ஒரே நேரத்தில் பெற முடியாது என்பதால் மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

அது என்னவென்றால் இனி மும்முனை மின்சாரமானது ஒவ்வொரு டெல்டா துணை மின்நிலையத்திலும் குரூப் 1 மற்றும் குரூப் 2 என்று பிரித்து அதன் படி தான் மும்முனை மின்சாரம் வழங்க உள்ளது.

குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய பகுதிகளுக்கு காலை 8:30 மணி முதல் மதியம் 02:30 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஆனால் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிகளுக்கு இரவு 12 To காலை 6 மணி வரையிலும் மற்றும் குரூப் 2 பகுதிகளுக்கு இரவு 11 To விடியற்காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

  யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?

டெல்டா அல்லாத துணை மின்நிலையம் முன்முனை மின்சாரம் அறிவிப்பு:

குரூப் 1 பகுதி:

  • காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்டும்.
  • இரவு 10:00 மணி முதல் காலை 04:00 மணி வரை மும்முனை மின்சாரம் அளிக்கப்படும்.

குரூப் 2 பகுதி:

  • குரூப் 2 பகுதிகளுக்கு காலை 09:30 மணி முதல் மதியம் 03:30 மணி வரையும் மற்றும் இரவு 10:00 மணி முதல் காலை 04:00 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil