இலவச மின்சாரம் அறிவிப்பு | Electricity Announcement in Tamil
தமிழ்நாட்டில் இலவசமாக விவசாயிகள் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் குறித்து, மத்திய அரசி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
மின்சாரம் வாரியம் அறிவிப்பு – Electricity Announcement in Tamil:
தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடிகளுக்கு மேலான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன. அதில் விவசாய மக்களுக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மின் கட்டணமானது வீடுகளை பொறுத்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. அதுவே உயர் அழுத்த மின்சாரத்திற்கு மாதம் மாதம் கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிட தற்போது “ஸ்டேடிக்” என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மின்சாரம் வாரியம் ஊழியர்கள் கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்கு தெரிவிப்பதையடுத்து நுகர்வோர்களுக்கு அதற்கான கட்டணம் தொகையைசெலுத்தி வருகின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி எல்லா ரயிலுமே புதுசா இருக்கும்..! அப்படி என்ன செய்ய போறாங்கன்னு தெரியுமா..?
அதேபோல் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட்டுகள் சலுகை விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர குடிசை வீடு விவசாயத்திற்கு முழுமையாக இலவசமாகவும், கைத்தறிக்கு 300 யூனிட் வரையும், விசைத்தறிக்கு 1,000 யூனிட் வரையும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதற்காக மின் வாரியத்திற்கு ஆகும் செலவை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. இலவச மின்சாரம் என்பதால் விவசாயம், குடிசை வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்படுவதில்லை.. அதனால் இந்த பிரிவுகளுக்கான மானியத் தொகையை உத்தேசமாக மதிப்பிட்டு வாரியத்திற்கு மாநில அரசு வழங்குகிறது.. அதாவது, ஒரு விவசாய இணைப்புக்கு ஆண்டுக்கு ஒரு குதிரை திறனுக்கு 3,550 ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது.
ஏனென்றால் இவற்றில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க, மீட்டர் எந்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்க கூடாது என்றும். முன்னதாவே இணைப்பது வழங்கப்பட்டிருந்தால் உடனே மீட்டர் பொறுத்த வேண்டும் என்றும் மாநில அரசுக்கு மத்திய அரசு பல முறை அறிவித்துள்ளது.
ஆனால் மீட்டர் பொருத்தினால் இலவச மின்சாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்று தமிழத்தில் சில எதிர்ப்புகள் கிளப்பின.. இருப்பினும் இது வரை தமிழகத்தில் 2 லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது..
மீதமிருக்கும் மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படவில்லை. ஆக இனி வரும் மாதங்களில் இலவச மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட்டு அதற்கான மானியத் தொகையை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மீட்டர் பொருத்துவதற்கு இன்னும் 30 லட்சம் மீட்டர்கள் தமிழகத்திற்கு தேவை. மின்வாரியத்திடம் அதற்கான தொகை இல்லை என்பதால், வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருவதால், அங்கிருக்கும் பழைய மீட்டர்களை விவசாய மாற்றம் குடிசை இணைப்புகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போன் பயனர்களே மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி என்னன்னு தெரியுமா..?
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














