ஏற்றுமதியாளர் ஆகணும்னு ஆசையா..! அப்போ அரசு அளிக்கும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்

Advertisement

ஏற்றுமதி இறக்குமதி பற்றி தெரிந்துகொள்வோம்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருமே தொழிலதிபர் ஆகவேண்டும் என்ற என்பதுடன் பார்ப்பீர்கள். சிலருக்கு ஏற்றுமதி இறக்குமதி பற்றி தெரியும். சிலருக்கு அது பற்றி தெரிந்தாலும் அதனை எப்படி செய்வது என்று யாருக்கும் தெரியாது. அதனை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டாலும் அந்த அளவிற்கு தெளிவாக சொல்வார்களா? நிச்சயம் சொல்ல மாட்டார்கள். காரணம் நம்மை விட பெரிய ஆளாக மாறிவிடுவார்கள் என்று ஒரு சின்ன பொறாமையில் சொல்ல மறுத்துவிடுவார்கள். இருந்தாலும் கொஞ்சம் தெரிந்ததை வைத்து ஏற்றுமதியாளராக மாறினாலும் அதில் சில வகையான தவறுகளை செய்து விடுவீர்கள். அதனால் தான் ஏற்றுமதி இறக்குமதியாளர்களாக மாறுவதற்கு என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று அரசே உங்களுக்கு சொல்லி தரப்போகிறது இந்த அறிய வாய்ப்பை விட்டுவிடாதிர்கள்..!

ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி:

இந்தியாவில் பலவகையான பொருட்களின் உற்பத்தி நிலை அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதிகளவு உற்பத்தி நிலை இருந்தாலும் அது அனைத்தையும் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்ய முடியாது. அதிகளவு பொருட்கள் உற்பத்தி செய்து நாமே நாம் நாட்டில் மட்டுமே பொருட்களை விற்கமுடியாது அல்லவா அதனால் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

ஆகவே நம்முடைய தேவைப்படுவது போல் மற்ற நாடுகளிலும் பொருட்களின் தேவை என்று சொல்லும் போது அதனை ஏற்றுமதி செய்ய முன் வருகிறோம். ஆகவே அதனை பற்றி தெரிந்துகொள்ள அவசியமாகிறது.

ஆசை இருக்கும் அனைவருக்குமே ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் ஆகலாம். ஆகவே  தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்க்கான வழிமுறைகளையும், விதிமுறைகளையும் பற்றி இணைய வழி மூலமாக நமக்கு தெரியப்படுத்துவதற்காக வரும் 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை (3 நாட்கள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது.

ஏற்றுமதி பயிற்சி வகுப்புகள்:

இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்பவர்களுக்கு ஏற்றுமதி சந்தையின் தேவையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரியப்படுத்துவார்கள். அதேபோல் ஏற்றுமதி  இறக்குமதி என்றால் முதலில் ஞாபகத்திற்கு வங்கி தான். அதில் செய்யும் பண பரிவார்த்தைனையும் பற்றியும் அதன் சட்ட திட்டங்களை பற்றியும் பயிற்சி அளிப்பார்கள்.

அதேபோல் அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள் பொருட்களின் காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை  பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு தகுதி:

இந்த பயிற்சிக்கு அதிகளவு  படித்தால் தான் உள் நுழை முடியும் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். இந்த பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்க உதவிகள் மற்றும். ஊக்க உதவிகள் எப்படி பெறுவதை பற்றியும்  இந்த பயிற்சியில் சொல்லபடுகிறது. நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அரசு தரும் காப்பீடு மற்றும் உதவிகளை பற்றியும் இந்த பயிற்சியில் விவாதிக்கப்படுகிறது.

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை தொடங்குபவர்கள், அல்லது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விருப்பவர்கள் 18 வயது நிரப்பியவராகவும் அதேபோல் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள முடியும்.

இதனை பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ள  www.editn.in என்ற வலைத்தளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் 10 பொருட்கள்..!

 

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News
Advertisement