Fines Will Be Issued For Pets Without A Licence In Tamil
இன்றைய பதிவில் பொதுவாக பலருக்கு வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிக விருப்பம் இருக்கும். அந்த வகையில் நாய் குட்டிகளை அனைவரும் விரும்பி வளர்ப்பார்கள். அந்த நாய் குட்டியை நம் வீட்டில் ஒரு குழந்தை போல் வளர்ப்போம். மேலும் அந்த நாய் குட்டிகளுக்கு உரிமம் பெற வேண்டும். எனவே தங்களுக்கு உதவும் வகையில் செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளவாறு அமையும். அட ஆமாங்க உங்க செல்ல நாய் குட்டிகளுக்கு அழகான பெயர்களை வைத்து அதற்கு உரிமம் பெற வேண்டும். அந்த வகையில் செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெறுவது மற்றும் உரிமம் இல்லாதவர்களுக்கு அபராத தொகை பற்றி பார்க்க போகிறோம்.
செல்ல பிராணிகளுக்கு உரிமம் :

சென்னையில் செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் இன்று முதல் அபராதம் விதிக்கும் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னையில் நாய்க்கடி சம்பவங்களை தவிர்ப்பதற்காக வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதுபோன்று பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. இந்த பணிக்காக அக்டோபர் முதல் நேற்றுவரை சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம்கள் நடத்திய நிலையில் 1,05, 556 செல்லப்பிராணிகளுக்கு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு 57,626 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டன.
உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு அபராதம் :
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு காலக்கெடு நிறைவடைந்த நிலையில் , அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு செய்ய உள்ளனர். உரிமம் பெறாத செல்லப்பிராணிகள் உரிமையாளருக்கு , ஐந்தாயிரம் ரூபாய் அதிகாரம் அபராதம் விதிக்கப்படும். என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விதித்துள்ளது. உரிமம் பெறுவதற்கான நடவடிக்கையும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
| இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |














