யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி? அரசு முக்கிய அறிவிப்பு..! Flood Relief Fund News..!
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்கும் என்பது தொடர்பாக தமிழக அரசு அரசனை வெளிக்கிடுகிறது இது குறித்த விரிவான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தற்பொழுது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் சென்னை மாவட்டத்தில் 16 லட்சம் நபர்கள் இருக்கின்றன. இது தவிர ரேஷன் அட்டை இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வசிக்கக்கூடியவர்கள் 3 லட்சம் பேர் உள்ளனர். எனவே அவர்களுக்கும் நிவாரண நிதி கொடுக்கலாம் என்று தமிழக அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.
எதன் அடிப்படையில் என்றால் அவர்கள் கேஸ் சிலிண்டரை சென்னையில் உள்ள முகவரிக்கு வாங்கிருப்பார்கள் அந்த ரசீது வைத்து அவர்கள் நிவாரண நிதியை வாங்கிக்கொள்ளலாம்.
ரேஷன் கார்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, வீட்டு வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் கூறபடுகிறது,
குறிப்பாக சென்னையில் இந்த கடைசி மூன்று மாதம் வாசித்துள்ளார் என்பதற்கான ஆதாரம் இருந்தித்தால் அவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் தொகை கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாம்.
இந்த நிவாரண தொகையை கூட்டுறவு துறையில் உள்ள ரேஷன் பணியாளர்கள் தான் இந்த தொகையை வழங்க போறாங்க. இந்த 6000 தொகையை 12 நோட்டுகளாக பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளும் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறதாம்.
இந்த நிவாரண தொகையை வருகின்ற சனி கிழமை முதல் அதாவது 16.12.2023 தேதி முதல் வழங்கப்படும் என்று கூறபடுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெள்ளத்தில் சிக்கிய கார்களை எப்படி கையாள வேண்டும் என்று தெரியுமா?
இழப்பீடுகள் விவரம்:
புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்.
சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்.
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/- லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/- லிருந்து, ரூ.8,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும்.
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும்.
சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/- லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெள்ளத்தில் சிக்கி பழுதான கார்களுக்கும் காப்பீடு பலன் உண்டா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |