மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் உண்மையானதா..! பொய்யானதா..?

Advertisement

Free Laptop News Fake or Real

நண்பர்களே 12 முடித்த மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் அரசு சார்பில் வழங்குவது ஒரு வழக்கம் ஆகும். அதேபோல் இந்த வருடம் 2023 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் ITI 10, 12 படித்துவர்களின் மேற்கொண்டு படிப்புகளுக்கு உதவிடும் வகையில் அரசு இலவச லேப்டாப் தரும் திட்டம் என்று புதிதாக ஒரு செய்து உருவாகி அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த செய்தி பரவி வருகிறது. இது உண்மையானதா இல்லை பொய்யானதா என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Fake news:

இலவசமாக லேப்டாப் தருவதாக ஒரு பொய்யான தகவலை இணையதளங்களில் வாட்சப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையென்று நினைத்து பலரும் அவர்களுடைய விவரங்களை உள்ளிட்டு அப்ளை செய்து வருகிறார்கள். ஆனால் இது உண்மையானதா பொய்யானதா என்ற கேள்வி இருக்கும்.

அது எப்படி ஷேர் செய்கிறார்கள். இந்த நியூஸ் எப்படி வருகிறது என்று இப்போது பார்க்கலாம்.

Screenshot_34

 

மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் ஏதேனும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாம் தேடியபோது அவ்வாறு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இது குறித்து வருடா வருடம் பரவி வருவதை நம்மால் காண முடிகிறது. இந்த தகவல்கள் குறித்து அடிக்கடி விளக்கமளித்துள்ள PIB நிறுவனம், தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் “இலவச லேப்டாப் என்று பரவும் இணைப்புகள் போலியானவை. அரசு தரப்பில் அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை” என்று தெளிவாகக் கூறியுள்ளது.

ஆகவே இந்த தகவலை படித்து உடனே யாரும் அதற்கு அப்ளை செய்வதை தவிர்க்கவும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement