4655 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான பல்வேறு அறிக்கைகளை வருவாய் துறை அறிவித்துள்ளது..!

Advertisement

இலவச வீட்டு மனை பட்டா மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான பல்வேறு அறிக்கைகளை வருவாய் துறை அறிவித்துள்ளது..! Free Patta Survey Land New Update 2023..!

Free Patta Survey Land New Update 2023 – நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால், இலவச வீட்டுமனை பட்டா, நில அளவை, நில ஆவணக்கள், நிலம் செயலி தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நேரு நடந்து முடிந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மானிய கோரிக்கையின் போது தமிழக அரசு அறிவித்துள்ளனர் அது குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வருவாய் துறை முக்கிய அறிவிப்பு:

நில அளவை மற்றும் நில ஆவணக்கள் தொடர்பான இ-சேவைகள் குறித்த தகவல்களை அளிக்கும் பொருட்டு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்கத்தில் தொலைபேசி அழைப்பு மையம் நிறுவப்படும்.

வருவாய் நிர்வாகம் 100% கணினிமயமாக்கப்படும். அதாவது அனைத்து சான்றிதழ்கள், உரிமங்கள், ஆவணங்களை இணையவழியாகப் பெறும் வகையில் வருவாய் நிர்வாகம் முழுவதுமாக கணினிமயமாக்கப்படும்.

நில உடைமைகளில் பெண்களுக்கு சம உரிமை: தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில் இருந்து திருமணமாகாத மகள்கள் மற்றும் பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்பட்டு மைனர் பிள்ளைகள் மற்றும் மைனர் பேரன் பேத்திகள் எனத் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

நில ஆவணங்கள் அறிய புதிய செயலி ஒன்று உருவாக்கப்படும்: புல எண், உரிமையாளர் பெயர் போன்ற இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிய புதிய செயலி உருவாக்கப்படும்.

சுய உதவி குழுக்களுக்கு வீட்டுமனைகள் குடிசைத்தொழிலில் ஈடுபட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ்…! இன்னும் இதை நீங்க தெரிஞ்சுக்கலையா..!

4655 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் (Free Patta Survey Land New Update 2023) எந்தெந்த மாவட்டங்களுக்கு என்றால் ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். 

23 கிராமங்களுக்கு ரயத்துவாரி மனை பட்டா: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 23 கிராமங்களில் 15000 குடும்பங்கள் பயனடையும் வகையில் ரயத்துவாரி மனை பட்டா வழங்கப்படும்.

சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு இணையவழி சேவைகள்: நலிந்தோர் நிவாரண உதவித் திட்டம் மற்றும் விபத்து நிவாரண உதவித் திட்டம் ஆகியவரை இணையவழியில் பெற நடவடிக்கை.

ரூபாய் 12.50 கோடியில் பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி புதிய TN-Alert கைபேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி உருவாக்கப்படும்.

ரூபாய் 16 கோடியில் இரண்டு பேரிடர் மீட்பு மையங்கள் அதாவது மயிலாடுதுறை மாவட்டம், திருமைலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் மழை, வெள்ளம் காலங்களில் பாதுகாப்பகத் தங்க வைக்க அமைக்கப்படும்.

கடலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் இடதுகரை ரூபாய் 14.50 கோடியில் ஆலைக்கற்கள் கொண்டு பலப்படுத்தப்படம்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement