ரேஷன் கார்டு
இந்திய நாட்டில் பிறந்து குடியுரிமை பெற்ற ஒவ்வொருவருவருக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டை போன்றவை மிகவும் முக்கியமான ஒரு ஆவணங்களாக உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு தமிழக அரசு மாதம் 1000 ரூபாய் என்ற திட்டத்தினை ஜூன் மாதம் நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் மாதம் தோறும் நாம் ரேஷன் கார்டினை வைத்து தான் சில அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை வாங்கி பயன் அடைகிறோம். இதனை தொடர்ந்து இப்போது மத்திய அரசு ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மற்றொரு இலவச அறிவிப்பினை அறிவித்துள்ளது. ஆகையால் அது என்ன அறிவிப்பு அதன் மூலம் யார் பயன்பெறலாம் என்ற முழு விவரத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ விவசாயிகளுக்கு ரூபாய் 3.6 லட்சம் மானியம்..! எதற்காக வழங்கப்படுகிறது தெரியுமா..
ரேஷன் கடை இலவச பொருட்கள்:
மாதந்தோறும் மக்கள் அனைவரும் நியாவிலை கடையில் குறிப்பிட்ட பொருட்களை அவர்களுடைய ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் அடிப்படையில் பெற்று வருகிறது. இதுநாள் வரையிலும் இப்படி பொருட்களை பெற்று கொண்டிருந்த மக்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது.
அது என்னவென்றால் இனி ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு இலவச செறிவூட்டப்பட்ட அரசி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் அரிசியுடன் சேர்த்து வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் இது மார்ச் மாதம் 2024-ற்குள் அமல் படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டு பயனர்களுக்கு வழங்க உள்ள இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் நிறைய சத்துக்கள் அடங்கி இருப்பதால் இது மக்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் நியவிலைக்கடையில் வழங்கப்படும் பொருளானது தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மட்டுமே அளிக்கப்படுகிறது. இத்தகைய திட்டத்தின் அடிப்படையில் 1 யூனிட்டிற்கு மாதம் 5 கிலோ உணவு தனியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டு வைத்து நபர்களுக்கு எப்போதும் வழங்கப்படும் அரிசியுடன் கூடுதல் அரசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வந்தது. இப்போது அந்த திட்டமானது 2023 டிசம்பர் மாதம் வரை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்⇒ மீண்டும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஓய்வு பெரும் வயது குறைப்பு..! இது தெரியாத உங்களுக்கு..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |