சரமாரியாக குறைந்த கேஸ் சிலிண்டரின் விலை..! இன்னமும் உங்களுக்கு இந்த நியூஸ் தெரியாம இருக்கா..!

Advertisement

சிலிண்டர் விலை குறைப்பு

ஒவ்வொரு மாதம் நமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தவறாமல்  வாங்கி விடுவோம். சிலர் வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் பட்ஜெட் முறையில் கணக்கு போட்டு வாங்குவார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் வாங்கும் பொருளின் விலையானது ஒவ்வொரு மாதமும் வேறுபட்டு கொண்டிருக்கும். இதில் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டரின் விலையும் அடங்கும். நாம் உபயோகப்படுத்தும் சமையல் சிலிண்டரின் விலையினை நிர்ணயிப்பது என்னவோ எண்ணெய் நிறுவனங்கள் தான். இத்தகைய விலையானது கச்சா எண்ணெயின் விலையினை பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் படி சில நாட்களுக்கு முன்பாக சமையல் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் மூலம் மக்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த அதிர்ச்சியினை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு மற்றொரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகாயல் அது என்ன அறிவிப்பு என்ற செய்தியினை விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு… அரசு எடுத்த அதிரடி முடிவினால் மகிழ்ச்சியில் மக்கள்.. 

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு: 

இன்று முதல் ஏப்ரல் மாதத்திற்கான நாட்கள் தொடங்கிவிட்டது. இத்தகைய ஏப்ரல் மாதம் வருவதற்கு முன்பாக சில விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தன. அந்த விதிமுறைகள் மூலம் புதிய மாற்றங்கள் வருமா..? என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருந்து வந்தது.

அப்படி எதிர்பார்க்கும் விஷயங்களில் கேஸ் சிலிண்டரின் விலையும் ஒன்றாக இருந்தது. ஏனென்றால் ஏப்ரல் மாதம் முதல் கட்டண உயர்வுக்கான விதிமுறைகளில் கேஸ் சிலிண்டரும் இடம் பெற்றிருந்தது.

இப்படிப்பட்ட எதிர்பார்ப்புடன் இருக்கும் மக்களுக்கு எண்ணெய் நிறுவனமானது கேஸ் சிலிண்டரின் விலை குறித்து ஒரு அறிவிப்பினை அறிவித்துள்ளது.

அது என்னவென்றால் வணிக சிலிண்டருக்கான விலையில் 76 ரூபாய் குறைவாக இனி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுநாள் வரையிலும் விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர் இனி 2192 ரூபாய்க்கு விற்பனை ஆகும் என்று கூறப்படுகிறது.

  இதையும் படியுங்கள்⇒அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..! இந்த மாஸான நியூஸை தெரிஞ்சிக்கலனா எப்படி.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement