புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 9 ஆம் தேதி பட்ஜெட் கூட்டு தொடர் நடந்தது. அப்போது நிதித்துறையில் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2023-2024-கிற்கான முழு பட்ஜெட் பற்றிய தகவலை கூறியுள்ளார். இதனை பற்றிய தகவலை இடஙக பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
சிலிண்டருக்கு மானியம்:
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கேஸ் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியத்தை முதல்வர் ரங்கசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக 126 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஓய்வு பெரும் வயது குறைப்பு..! இது தெரியாத உங்களுக்கு..
பெண் குழந்தைகளுக்கு 50 ரூபாய்:
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை முதல்வர் ரங்கசாமி அவர்கள் அறிவித்தார். இத்திட்டம் மூலமாக பெண் குழந்தை பிறந்தவுடன் 50,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும்.
பள்ளிகளில் மாலை சிற்றுண்டி:
மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, மாலையில் சிறுதானிய சிற்றுண்டி, முதியோருக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு போன்ற பல கவர்ச்சியான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
பிளாஸ்டிக் மறு சுழற்சி இயந்திரம்:
கடலுக்கு அடியில் உயிரியல் பூங்கா, பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்யும் இயந்திரம் நிறுவப்படும் என தெரிவித்தார். மேலும் அனைத்து தெரு மின் விளக்குகளையும் 4.50 கோடி எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் என அறிவிட்டார்.
விவசாயிகளுக்கு ரூபாய் 3.6 லட்சம் மானியம்..! எதற்காக வழங்கப்படுகிறது தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |