தங்கம் விலை இன்று
பொதுவாக பெண்களுக்கு அணிகலன்கள் மீது அதிகப்படியான ஆர்வம் காணப்படும். அதாவது தோடு, தொங்கல், மாட்டல், வளையம் மற்றும் நெக்லஸ் என இவற்றை எல்லாம் ஓரே நேரத்தில் போட்டு தன்னை தானே அழகு பார்க்க வேண்டும் என்ற ஒரு குட்டி ஆசை காணப்படும். அதுவும் இந்த குட்டி ஆசையினை தங்க நகைகளை அணிந்து தான் நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் படி பார்க்கையில் என்ன மாதிரியான தங்க நகைகள் வாங்க வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் போட்டு வைத்து அதன் படியே ஒன்று ஒன்றாக பணம் இருப்பதற்கு ஏற்றவாறு வாங்குவார்கள்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் பட்ஜெட் முறையில் தங்க நகைகளை வாங்கினாலும் கூட புத்தாண்டு, அக்ஷ்ய திருதியை, தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மற்றும் கிறித்துமஸ் என இத்தகைய நாட்களில் ஏதேனும் ஒரு சிறிய அளவில் உள்ள தங்க நகையாவது வாங்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நெருங்கி கொண்டிருக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் விதமாக அதிகரித்து உள்ளது. அதனால் இன்றைய தங்கம் விலை எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
22 கேரட் இன்றைய தங்கம் விலை நிலவரம் 04.12.2023:
1 கிராம் தங்கம் விலை இன்று:
தங்கம் விலையினை நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் கிராம் ஒன்றிற்கு 65 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது 1 கிராம் தங்கம் இன்று 5,975 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
1 சவரன் தங்கம் விலை இன்றைய நிலவரம்:
22 கேரட் மதிப்புள்ள 1 பவுன் தங்கம் விலை 480 ரூபாய் இன்று அதிகரித்து 47,800 ரூபாய்க்கும், 4 கிராம் தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிகரித்து 23,900 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
24 கேரட் தங்கம் இன்றைய விலை விவரம் 04.12.2023:
1 கிராம் தங்கம் விலை இன்று:
24 கேரட் மதிப்புள்ள இன்றைய தங்கம் விலையினை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் கிராம் 1-க்கு 65 ரூபாய் அதிகரித்து 6,445 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
1 பவுன் தங்கம் விலை இன்றைய நிலவரம்:
அதேபோல் 1 பவுன் விலை ஆனது 480 ரூபாய் அதிகரித்து 51,560 ரூபாய்க்கும், 4 கிராம் தங்கம் விலை 240 ரூபாய் வரை அதிகரித்து 25,780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |