இந்த விளம்பரங்களை தொட்டாலே ஆபத்து – உஷார் மக்களே! Google ad scam in mobile
இணையதள விளம்பரங்களை கிளிக் செய்ய கூறியும், யூடியும் வீடியோவை லைக் செய்ய தூண்டியும் கும்பல் பணம் மோசடி செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
இந்த விளம்பரங்களை தப்பித்தவரிகூட தொடவேண்டாம் – உஷார் மக்களே! Google ad scam in mobile:
என்டர்டைமன்ட், பொழுது போக்கு மற்றும் பலதரப்பட்ட தகவல்களின் தேடல்களுக்கு நாம் இணையதளத்தை பயன்படுத்தும்போது திடீர் என்று செல்போன் ஸ்கிரீனை மறைத்து தோன்றும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலூட்டும்.
அதிலும் சில விளம்பரங்கள் நாம் எதற்காக அந்த இணையதள பக்கத்திற்கு வந்தோம் என்பதை மறக்கடித்து தொடர்ந்து விளம்பரங்களின் மூலம் நமது கவனத்தை திசைதிருப்பி வேறொரு பக்கத்திற்கு அழைத்து செல்லும்.
இவையெல்லாம் நம் தினசரி வாழ்க்கையிலும் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதானே என்று எளிதாக கடக்கும்போதுதான் ஒரு மோசடி கும்பல் அங்கு ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ட்விட்டர், Space X நிறுவனத்திற்கு பெண் CEO அறிவிப்பு..!
சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் ஒரே விவகாரங்கள் தொடர்பாக அடுக்கடுக்கான நபர்கள் காவல் நிலையத்தில் குவிந்திருக்கின்றன. அனைத்தும் இணையதள விளம்பரங்களை கிளிக் செய்ய கூறியும், யூடியும் வீடியோக்களை லைக் செய்ய தூண்டியும்தாங்கள் பணம் மோசடிக்கு ஆளாக்கப்பட்டதாக புகார்கள்.
பாதிக்கப்பட்ட அனைவரும் எளிதாக அதிக பணம் சம்பாதிக்க விரும்பும் மிடில் கிளாஸ் மற்றும் இளைஞர்கள் என்று அறிந்த சைபர் கிரைம் போலீஸ். விசாரணையை துரிதப்படுத்தியதில் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இணையதள பக்கத்தை பயன்படுத்தும் போது நீங்கள் இந்த விளம்பரத்தை கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றும், இந்த பக்கத்திற்கு ரேட்டிங் கொடுப்பதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் என்றும் அவர்களின் செல்போன் ஸ்கிரீனில் விளம்பரம் தோன்றி இருக்கிறது.
இதனை ஆரம்பத்தில் தரித்த மக்களை, மீனுக்கு இறை வைப்பதுபோல் வைத்து வலைவீசி, அந்த வலையில் சிக்க வைக்கும் டெக்னீகை அந்த மோசடி கும்பல் பயன்படுத்தியுள்ளது.
தொடர் விளம்பரங்கள் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் என மக்களை கிளிக் செய்ய வைத்த கும்பல் தொடக்கத்தில் கூறியது போல 1000 ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின் அவர்களது விவரங்களை சேகரித்து டெலிகிராமில் குரூப் ஆரம்பித்த நிலையில் தொடர்ச்சியாக சில இணையதள விளம்பரங்கள், டெலிகிராம் பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முதலியவரை கிளிக் செய்யவும், லைக் செய்யவும் தூண்டி வந்துள்ளது.
இதில் பணம் வாங்கி பழக்கப்பட்டவர்கள் பின்பு அந்த மோசடி கும்பல் விரித்த வலையில் மெல்ல மெல்ல சிக்க ஆரம்பித்துள்ளனர், முதலீடு செய்தால் இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வலை விரித்ததில் 31 லட்சம் முதல் 1.2 கோடி வரை பணத்தை முதலீடு செய்து, தனி நபர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை ஏமாற்றமடைந்துள்ளனர். அதன் பிறகு அந்த மோசடி கும்பல் அந்த பணத்தை வாரிசுரிட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.
அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றன.
கையடக்கத்தில் இருக்கும் இந்த செல்போனை தப்பி தவறி கூட இந்தமாதிரியான மோசடி கும்பலிடம் இருந்து மற்றும் ஆன்லைன் தொடர்பான விவகாரங்களை கவனமுடன் கையாள வேண்டும் என்று போலீஸ் எச்சரித்து வருகின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Google Bard இந்தியாவிற்கு வந்துவிட்டது..! இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |