Google வெளியிட்டுள்ள 6 புதிய AI அம்சங்கள்..! என்னென்ன தெரியுமா..?

Advertisement

Google AI Bard 6 Features

ஹலோ நண்பர்களே..! உங்கள் போனில் கூகுள் இருக்கிறதா..? ஒருவேளை நான் கேட்கும் இந்த கேள்வி தப்பு என்று நினைக்கின்றேன். ஏனென்றால் ஸ்மார்ட் போன் என்றால் கூகுள் இல்லாமல் எப்படி இருக்கும் சொல்லுங்கள். கூகுள் பற்றி தெரியாதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? அப்படி உலகிலே பெரிய நிறுவனமாக தினமும் கூகுள் நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனமானது அதன் 4 முக்கிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.. மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Google வெளியிட்டுள்ள 6 புதிய AI அம்சங்கள் என்ன..? Google AI Bard 6 Features

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய தயாரிப்புகளை தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதுபோல கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய தயாரிப்புகளில் முக்கிய தயாரிப்பான Google BARD இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது. ChatGPT -யுடன் போட்டிபோடும் வகையில் உருவாக்கப்பட்ட AI Google BARD பல நன்மைகளை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. மேலும் அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 Google Bard இந்தியாவிற்கு வந்துவிட்டது.. இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
இந்தியாவில் ChatGPT -யுடன் போட்டிபோட வந்திருக்கும் AI Google BARD 6 புதிய AI அம்சங்களை வழங்குகிறது. அது என்னென்ன என்று இங்கு காணலாம்.

Help Me Write:

Gmail -ல் “Help Me Write” என்ற AI Tool சேர்க்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு வந்த  Email -லில் இருந்து பொருத்தமான தகவல்களை கண்டறிந்து, அதற்கான சரியான Reply -யை உருவாக்க உங்களுக்கு உதவுகிறது.

Google AI Bard 6 Features

Immersive View:

Google Maps ஆப்பில் Immersive View என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நீங்கள் ஒரு இடத்திற்கு செல்ல விரும்பினால், Google Map உங்களுக்கு பல்வேறு  வழிகளை காட்டும்.

அதுவே நீங்கள் அந்த பாதைகளில் Photorealistic view பார்க்க Immersive View என்ற அம்சம் உங்களுக்கு உதவுகிறது. மேலும் இதில் Real time weather updates, Air quality index அதாவது நீங்கள் செல்லும் பகுதியில் இருக்கும் காற்றின் தரத்தை கண்டறிவது போன்ற அம்சங்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகம்.. கூகுள் நிறுவனம் கூறுவது என்ன

Magic Editor:

சுந்தர் பிச்சையின் கணிப்புப்படி, இந்த ஆண்டில் Google Photos ஆப்பில் ஒரு Magic Editor சேர்க்கப்படுகிறது. இந்த Magic Editor என்பது இமேஜ்களை மேம்படுத்த  Semantic Engineering மற்றும் Generative AI பயன்படுத்துகிறது.

Google AI Bard 6 Features

Update in Google Bard:

Google AI Chatbot என்று சொல்லக்கூடிய AI Google BARD இப்போது 20 -க்கும் மேற்பட்ட Programming languages, Coding மற்றும் Debugging செய்ய உதவுகிறது. மேலும் கூகுள் நிறுவனமானது Google BARD காத்திருப்பு பட்டியலையும் அகற்றி உள்ளது. இதன் மூலம் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் Google BARD ஆங்கில மொழியில் திறந்து விடப்பட்டுள்ளது.

AI Update in Google Search: 

கூகுள் Search -லும் புதிய AI அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இனிமேல் கூகுள் Search மேம்படுத்தப்பட்ட Safety systems கூடுதல் விவரங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் முடிவுகளை, அதாவது More integrated search results காண்பிக்கும் என்று கூறியுள்ளது.

PalM 2: 

மேலும் கூகுளின் CEO சுந்தர் பிச்சை அவர்கள், 100 -க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கும் மற்றும் ஒத்துழைப்பை அனுமதிக்கும் Google Language Model -லில் லேட்டஸ்ட் வெர்ஷன் என்ற PalM 2 -யை அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா..! அப்போ இனி ஜாலி தான்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement