Google AI Eye Scan Heart Disease
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் நலக்குறைப்பாடு என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் குறிப்பாக நமது உடலில் ஏதாவது ஒரு பகுதியில பலத்த அல்லது அதிகமாக ரத்தம் வரும் அளவிற்கு காயம் பட்டிருந்தாலோ உடனே ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதேபோல் ஒவ்வொரு உறுப்பிற்கும் என்றும் தனித்தனியாக ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டியது இருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தியை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது கூகிளின் AI பயன்படுத்தில் கண்களுக்கான ஸ்கேன் மூலம் இருதயம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை கண்டறியும் நிகழ்வு ஒன்று வந்துள்ளது. இந்த செய்தி கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் கூட சாத்தியமான ஒன்றாக கருதப்படுகிறது. சுந்தர் பிச்சையின் இத்தகைய அம்சத்தினை பற்றிய முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கூகுள் AI அமைப்பு:
ஒரு மனிதனுக்கு கண் என்பது இன்றையமையாத ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய கண் அமைப்பினை வைத்தே AI நுண்ணறிவும் மூலம் கண் தெரியாமல் இருக்கும் பிரச்சனையினை கண்டறியும் முறையினை கூகுள் ஆராச்சியாளர்களின் உதவியுடன் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருந்தது.
ஆரம்பத்தில் இது திட்டமிட்டவாறு இல்லாமல் தற்போது ஒரு மனிதனின் கண் ஸ்கேனை வைத்து இருதய நோயினை அறிந்துக்கொள்ளும் முறை ஆனது கண்டறியாளப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இதற்கான ஒரு அம்சம் வெளியாகியுள்ளது. அதாவது நம்முடைய கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த நபரின் பாலினம், வயது, மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம், மாரடைப்பு என இதுபோன்றவற்றை கண்டறியும் முறையினை தற்போது வடிவமைத்து கொண்டிருப்பதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தினையும் ஸ்கேன் செய்வதன் மூலமாக பெறுவதனால் ஒரு மனிதன் அடுத்த 2 ஆண்டுகளில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிய முடிகிறது. அதேபோல் புகைபிடித்தவர் மற்றும் புகைபிடிக்காதவர் என இருவரின் நிலைமையினையும் அறிய உதவுகிறது.
இதற்கான ஆய்வாக சுமார் தோராயமாக 3,00,000 நோயாளிகளின் மருத்துவ விவரங்களை பெற இயந்திர கற்றலை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
AI ஆனது தற்போது அனைவருக்கும் மிகவும் ஒரு அருமையான தொழில்நுட்ப தகவலை வழங்கினாலும் கூட தற்போது இந்த முறையின் மூலம் ஒரு மனிதனின் கண்ணை வைத்து அவரின் வாழ்க்கை முறையினை தெரிந்துக்கொள்ளும் அளவில் வந்துள்ளது என்று சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.
மேலும் பார்கின்சன், அல்சைமர் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா, டிமென்ஷியா, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற இதர நோய்களையும் கண்டறியும் விதமாக இந்த அம்சம் வந்துள்ளது என்று பிச்சை கூறியுள்ளார்.
Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |