Google Bard இந்தியாவிற்கு வந்துவிட்டது..! இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?

Advertisement

Google Bard in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய நிலையில் நம் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் இருக்கிறது. ஸ்மார்ட் போன் அறிமுகமான போது அதை வசதியான ஒரு சிலர் மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட் போனின் பயன்பாடு எந்தளவிற்கு அதிகரித்திருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படி நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்த முக்கிய காரணமாக இருப்பது Google தான். அப்படி உலகின் பெரிய நிறுவனமான கூகுள் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் அதன் முக்கிய 4 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.. மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியாவிற்கு வந்தது Google Bard..! 

Google Bard in Tamil

இந்த உலகையே தன் இராஜ்ஜியமாக மாற்றியுள்ள AI என்ற Chatbot சேவையான ChatGPT மக்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனமானது, ChatGPT -யுடன் போட்டிபோடும் வகையில் கூகுள் மிகப்பெரிய திட்டத்துடன், அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் Google Bard என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

அப்படி Google நிறுவனம் உலகளவில் பல மொழிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்த Google Bard அமெரிக்காவில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இதனை தொடர்ந்து Google Bard இந்தியாவிலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகம்.. கூகுள் நிறுவனம் கூறுவது என்ன

Google Bard in Tamil

இதை நீங்கள் பயன்படுத்த Google BARD -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bard.google.com என்ற இணைய தளத்திற்கு செல்லவும். பின் அதை நீங்கள் பயன்படுத்தும் போது சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கேட்கப்படும்.

அதன் பின் நீங்கள் காத்திருப்புப் பட்டியலுக்குச் செல்லாமல் Google Bard -ஐ இலவசமாகப் பயன்படுத்தலாம். நீங்கள் உள்நுழைந்ததும் உங்கள் கேள்வியை கேட்க துவங்கலாம்.

Google Bard -ஐ யாரெல்லாம் பயன்படுத்தலாம்..? 

கூகுள் நிறுவனமானது Google Bard -ஐ 180 நாடுகளில் பயன்படுத்த தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் Google Bard -ஐ அனைத்து தரப்பினரும் பயன்படுத்த பாதுகாப்பானதாக இருக்கும். அதேபோல பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை Google Bard -ஐ பயன்படுத்த முடியும்.

ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா..! அப்போ இனி ஜாலி தான்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement