Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி..! மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது..!

Advertisement

Google IO 2023 in Tamil

வணக்கம் நண்பர்களே..! பெரும்பாலும் இன்றைய நிலையில் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறோம். அப்படி நாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு முக்கிய தளமாக இருப்பது Google தான். Google நிறுவனத்தை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். அது எவ்வளவு பெரிய நிறுவனம், அது எப்படி உருவானது என்று நம் அனைவருக்குமே தெரியும் அல்லவா..! தெரியவில்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்👉 Google App எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா

இப்போது Google உருவான வரலாற்றை தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் கூகுள் நிறுவனமானது தற்போது 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அது என்ன அறிவிப்பு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி..!

Google நிறுவனத்தில் வரும் மே 10 ஆம் தேதியன்று கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு (Annual Developer Conference) நடக்க போகிறது. அதாவது Google I/O 2023 என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் போது கூகுள் நிறுவனத்தின் தலையெழுத்தை மாற்றும் 4  தயாரிப்புகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தயாரிப்புகள் எப்படி கூகுளின் தலையெழுத்தை மாற்றும் என்று நீங்கள் கேட்பீர்கள். சரி அந்த 4 முக்கிய தயாரிப்புகளை இங்கு காணலாம்.

இனி EB பில் ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கூகுளின் முக்கிய தயாரிப்புகள் என்ன..? 

மே 10 ஆம் தேதி நடக்கும் முதல் அறிவிப்பு Pixel Fold தான். இது கூகுள் நிறுவனத்தின் முதல் Foldable Smartphone ஆகும். இந்த போனின் அறிமுகமானது தனியாக ஆட்சி செய்து வரும் Samsung -ற்கு கடும் போட்டியாக இருக்கும்.

அதனால் இது கூகுள் I/O 2023 நிகழ்வின் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த Foldable Smartphone 1,48,000 ரூபாய்க்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

அதேபோல மே 10 ஆம் தேதி கூகுள் நிறுவனம் அதன் Pixel Tablet அறிமுகம் செய்யப்போகிறது. இந்த Pixel Tablet -ன் வன்பொருள் (Hardware) அம்சமானது Apple iPad -களை விட சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தோராயமாக 48,500 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.

Latest News👉 இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி.. என்னனு தெரிஞ்சிக்கோங்க.. 

மூன்றாவதாக வெளியிடும் முக்கிய அறிவிப்பு என்னவென்றால் Pixel 7a என்ற  ஸ்மார்ட்போன் தான். இந்த ஸ்மார்ட் போனானது மே 11 ஆம் தேதி இந்தியாவில்  அறிமுகமாகும். இது Flipkart வழியாக விற்பனை செய்யப்படும் என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 46,000 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக ChatGPT -க்கு கடும் போட்டியளிக்கும் விதமாக, கூகுளின் சொந்த Generative AI Tool என்று சொல்லக்கூடிய Bard மீது சில முக்கிய மேம்பாடுகள் அறிவிக்கப்படும் என்று Google நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 முக்கிய தயாரிப்புகளையும் கூகுள் நிறுவனம் மே 10 ஆம் தேதி அன்று வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News👉அரசு விரைவு பேருந்தில் போனால் பெண்களுக்கு பல நன்மைகள்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement