கூகுள் மேப்பின் புதிய அம்சம் பாத்தா சும்மா அசந்து போயிடுவீங்க..!

Advertisement

Google Maps AI New Features 2023 

ஆரம்ப காலத்தில் எல்லாம் ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் முதல் இரவே அந்த ஊரின் முகவரியை தெரிந்துக்கொள்ளும் பழக்கமானது இருந்தது. ஆனால் இப்போது இந்த பழக்கம் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டது. அப்படி பார்த்தால் இந்த காலக்கட்டத்தில் எந்த ஊராக இருந்தாலும் யாரிடமும் உதவி கேட்காமல் செல்லலாம். ஏனென்றால் மனிதர்களை காட்டிலும் துல்லியமான முறையில் அனைத்து விதமான தகவலையும் சரியான முறையில் கூகுள் மேப் காண்பிக்கிறது. ஆகையால் எல்லாரும் இந்த மேப்பின் உதவியுடன் செல்ல வேண்டிய கோவில், ஹோட்டல், துணி கடை மற்றும் கடல் என அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பான முறையில் சென்று விடுகிறோம். இவ்வாறு பல வகையிலும் உதவியாக இருக்கும் கூகுள் மேப்பில் பல புதிய அம்சங்கள் வந்து உள்ளது. எனவே அது என்ன அம்சம் முன்பை விட இது எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை தெளிவாக இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

கூகுள் மேப்பின் புதிய அம்சம்:

Lens in Maps:

google lens

Lens in Maps அம்சமானது உங்களுக்கு தேவையான அனைத்து விதமான ஹோட்டல், மளிகை கடை, ATM, Hospital என இதுபோன்ற கடைகள் அனைத்தினையும் காண்பிக்கும். அதாவது கூகுள் மேப்பில் லென்ஸ் அம்சம் மூலம் நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தினை சுற்றி என்னென்ன இருக்கிறது என்பதை துல்லியமான முறையில் சுற்றி காண்பிக்கும்.

ஆகவே நீங்கள் தெரியாத ஒரு இடத்திற்கு சென்றாலும் அங்கு என்னென்ன கடைகள் இருக்கிறது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை எந்த லென்ஸ் அம்சம் சுட்டி காட்டிவிடும்.

Reduce Charging Anxiety in Google Maps AI in Tamil:

 reduce charging anxiety in google maps ai in tamil

தற்போது பெரும்பாலும் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு எலக்ட்ரிக் வாகனம் பயணம் செய்யும் போது அப்போது உங்களுக்கு சார்ஜ் தேவைப்பட்டால் அந்த இடத்தில் எங்கு எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன் செய்யும் இடம் இருக்கிறது என்பதை உங்களுக்கு வழிகாட்ட இது மிகவும் உதவியாக இருக்கும்.

Immersive View for Routes Google Maps in Tamil:

Immersive View for Routes Google Maps

முன்பை காட்டிலும் தற்போது கூகுள் மேப் மூலமாக நீங்கள் நல்ல தெளிவான வழிகளை காண முடியும். நீங்கள் எந்த இடத்தினை கூகுள் மேப் மூலமாக பார்க்க விரும்புகிறீர்களோ அதற்கான திருப்தி கிடைக்கும் விதமாக தெளிவான முறையில் உங்களுக்கு காண்பிக்கும்.

இந்த அம்சம் துல்லியமாக சொல்லப்போனால் கழுகை பார்வை போன்ற அமைப்பினை அளிக்கும் விதமாக இருக்கும். மேலும் நீங்கள் செல்லும் வழியில் என்னென்ன இடங்கள் இருக்கிறது என்பதையும் உங்களுக்கு காண்பிக்கும்.

Improved Navigation Maps Google Maps:

காலையில் நாம் ஒரு இடத்திற்கு எல்லாம் வேண்டும் என்று கிளம்பினால் அந்த இடத்தினை சென்றடைவதற்குள்ளே எண்ணற்ற டிராபிக் ஏற்படும். ஆகவே எந்த இடத்தில் எப்போது டிராபிக் ஏற்படுகிறது என்பதை நம்மால் உடனே அறிய முடியாது.

ஆனால் கூகுள் மேப்பின் இந்த அம்சம் மூலமாக நீங்கள் எந்த இடத்தில் டிராபிக் இருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்த அதற்கு ஏற்றவாறு பயணம் செய்யலாம்.

New Features of Google Maps:

நீங்கள் தேடும் தேடலுக்கான அனைத்து விதமான பதிலையும் இதன் வாயிலாக முதலில் பெறுவீர்கள். இதில் நீங்கள் நினைத்தை காட்டிலும் துல்லியமான முறையில் படங்களை காணலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement