பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகம்..! கூகுள் நிறுவனம் கூறுவது என்ன..?

Google Passkeys News in Tamil

Google Passkeys News in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இன்று நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை தான் காணப்போகின்றோம். இன்றைய நிலையில் நம் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதுபோல நாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு முக்கிய தேவையாக இருப்பது கூகுள் தான். ஸ்மார்ட் போன் அனைத்திலும் Google பயன்பாடு தான் அதிகமாக இருக்கிறது. அப்படி பெரிய அளவிலான Google நிறுவனம் தற்போது அதன் 4 தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.. மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி என்ன..? 

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி என்ன

பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகை உருவாக்கப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது உலக பாஸ்வேர்ட் தினம் (World Password Day) அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Passkeys என்பவை மூலம் பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகை அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது. அதை பற்றி விரிவாக காணலாம்.

கூகுள் நிறுவனம் Passkeys பயன்படுத்தி Apps மற்றும் Website -களை விரைவில் Sign in செய்ய முடியும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. பொதுவாக World Password Day என்பது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வியாழக்கிழமை அன்று  கொண்டாடப்பட்டு வருகிறது.

👉 Google App எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா

அதுபோல இந்த நடவடிக்கை “பாஸ்வேர்ட் இல்லா எதிர்காலத்தை” Passwordless Future நோக்கிய ஒரு முக்கிய படியாகும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் “Beginning of the end of the password” என்ற ஒரு Blog Post-ஐ கூகுள் நிறுவனம் ஷேர் செய்து உள்ளது. இது முக்கிய Platform -களில் உள்ள அனைத்து Account -களிலும் Passkeys -களுக்கான சப்போர்ட்டை படிப்படியாக வெளியிட்டு வருவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் என்ன பயன் இருக்கிறது என்று நீங்கள் யோசிப்பீர்கள். அதை பற்றி கீழ் காணலாம்.

இனி EB பில் ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இதனால் என்ன பயன்:

Google நிறுவனத்தின் இந்த முயற்சி பயனர்களை ஹேக்கிங் சிக்கலில் இருந்து பாதுகாக்கும் என்று கூறுகிறது.

பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பாஸ்வேர்ட்ஸை விட Passkeys மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல சைபர் தாக்குதல்களைத் தடுக்க உதவும். தற்போது புழக்கத்தில் உள்ள Password முறையானது, தவறான நபர்களின் கைகளுக்கு சென்றால் உங்களை பெரும் ஆபத்தில் சிக்க வைக்கும்.

எனவே Sign in செய்வதில் பாஸ்வேர்ட்ஸ், 2-Step Verification போன்றவற்றுடன்  பயனர்கள் பயன்படுத்தக்கூடிய கூடுதல் ஆப்ஷனாக Passkeys இருக்கும் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.

Latest News👉 இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி.. என்னனு தெரிஞ்சிக்கோங்க.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil