Google Pay Enable Aadhaar Authentication For UPI Activation in Tamil
ஹலோ நண்பர்களே..! நீங்கள் Google Pay ஆப் யூஸ் பண்றீங்களா..? அப்போ உங்களுக்கு ஒரு முக்கியமான தகவலை கூறப்போகிறேன். அது என்ன தகவலாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா..? ரொம்ப யோசிக்க வேண்டாம். இந்த பதிவை முழுமையாக படித்து அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஸ்மார்ட் போன் வந்த பின் தான் நம்முடைய பல வேலைகள் எளிதானதாக மாறிவிட்டது. முன்பெல்லாம், பணம் அனுப்பவோ அல்லது பணம் பெறவோ வங்கிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதனால் இருந்த இடத்தில் இருந்தே ஸ்மார்ட் போன் மூலம் பண பரிவர்த்தனை செய்து கொள்கின்றோம். இதனை தொடர்ந்து தற்போது Google Pay -யில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது என்ன என்று இங்கு காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl |
Google Pay -யில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றம் என்ன..?
இன்றைய நிலையில் UPI மூலம் பணம் செலுத்த பயன்படும் செயலிகளில் Google Pay முதலிடத்தில் உள்ளது. Google Pay ஆப்பை மட்டுமே அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற பேமெண்ட் ஆப்களை விட கூகுள் பே மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து டிஜிட்டல் கட்டணச் சேவை செயலியான Google Pay ஆனது, ஆதார் எண்ணைப் பயன்படுத்தி UPI சேவையை செயல்படுத்தும் கூடுதல் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தகவலை Google Pay நிறுவனம் 07.06.2023 அன்று தெரிவித்துள்ளது.
இந்தச் சேவையானது Google Pay பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin நம்பரை அமைக்க உதவும். ஆனால் மொபைல் ஃபோன் எண்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் ஆதார் எண்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.
வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு.. இனி UPI மூலம் இவ்வளவு தான் பணம் அனுப்ப முடியும் |
உங்கள் போன் எண்ணை பயன்படுத்தி OTP பெற்று உங்கள் வங்கி கணக்கையும் Google Pay ஆப்பையும் இணைத்துக்கொள்ள முடியும். ஆனால், அதன்பின் பணப் பரிவர்த்தனைகளை செய்ய Verification செய்வது மிகவும் முக்கியமாகும்.
இதனால் ஆதார் அடிப்படையிலான UPI Onboarding Flow மூலம், Google Pay பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமலேயே UPI Pin -ஐ அமைக்க முடியும். மேலும் UPI அடுத்து கோடிக்கணக்கான இந்தியப் பயனர்களுக்கு அதிகரிக்கும் என்பதால், இது இன்னும் பல பயனர்களுக்கு UPI -ஐ அமைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ID -கள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களைச் செய்ய உதவுகின்றன என்று Google Pay ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இனி ATM -ல் இப்படி கூட பணம் எடுக்கலாமா.. இது இன்னும் சூப்பரா இருக்கே.. |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |