Google pay news tamil
கூகுள் பே என்பது, மொபைல் சாதனங்களில் ஆப்ஸ், ஆன்லைன் மற்றும் நேரில் தொடர்பு இல்லாத வாங்குதல்களைச் செய்ய, ஆண்ட்ராய்டு போன்கள், டேப்லெட்டுகள் அல்லது வாட்ச்கள் மூலம் பயனர்கள் பணம் செலுத்துவதற்கு உதவும் வகையில், கூகிள் உருவாக்கிய மொபைல் கட்டசேவைணச் யாகும். இதன் மூலம் நாம் எளிதாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக வங்கிளிலும் ATM மிஷினில் கால் கடுக்க நிக்க வேண்டிய அவசியம் இருக்காது. மிக எளிதாக நமது மொபைல் மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்லாம். இது உலக அளவில் பயன்படுத்தப்படும் யுபில் செயலிகளில் இந்த கூகிள் பே செயலையும் ஓன்று. நண்பகத்தனமான செயலி Google pay என்றாலும் கூகிள் நிறுவனம் கூகுள் பே பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Google pay பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..
கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும்போது, திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கூகுள் பே செயலியில், சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிய கூகுளின் சிறந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் பாதுகாப்புடன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில் கூகுள் பே செயலியில் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனைகளுக்கு, சில செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மொபைல் போன், கணினி, லேப்டாப் என எந்த சாதனத்திலும் கூகுள் பே செயலியில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, திரை பகிர்வு செயலிகள் (screen sharing apps) அனைத்தையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது. இது உங்கள் சாதனத்தின் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும். உங்களின் டெபிட் கார்டு, வங்கிக் கணக்கு தகவல்களை எடுத்துக்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும்போது, ஸ்கிரீன் ஷேர் (Screen Share), எனி டெஸ்க் (AnyDesk), டீம் வியூவர் (Team Viewer) உள்ளிட்ட திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த செயலிகள் பயன்பாட்டில் இல்லாததை உறுதி செய்துகொள்ளுமாறும் கூறியுள்ளது.
மேலும் இதுபோன்று திரை பகிர்வு செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறோ பயன்படுத்துமாறோ கூகுள் செயலிகளில் எச்சரிக்கை அறிவிப்பு வராது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |