ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய UPI விதிகள்..! | கூகுள் பே, போன் பே செயல்படாது..!

Advertisement

Google pay Phone pay New Rules From April 1 In Tamil

இன்றைய காலத்தில் நாம் செய்யும் அனைத்து செலவுகளையும் கூகுள் பே, போன் பே மூலம் தான் செய்கிறோம். ஒரு சிறிய தொகை செலவு செய்வதற்கு கூட நாம் கூகுள் பே தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்க்கு நம் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. பெரும்பாலான மக்கள் கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. எவ்வவளவு சிறிய தொகையாக இருந்தாலும் அல்லது பெரிய தொகையாக இருந்தாலும் கூகுள் பே தான் உபயோகிக்கிறார்கள். அந்த அளவிற்கு UPI Transaction நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் வங்கிகள் ஏப்ரல் 1 முதல் புதிய UPI  வித்துமுறைகளை அமலுக்கு கொண்டுவர உள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், UPI ID வைத்திருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் வங்கிகள் கொண்டுவந்துள்ள புதிய UPI  விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மகளிர் உரிமை தொகை பட்ஜெட் 2025

UPI  புதிய விதி:

 ஏப்ரல் 1 முதல் Google Pay, Phone Pay, Paytm போன்ற UPI ஆப்ஸ்களுடன் இனிக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த எண்களை வங்கி முடக்க உள்ளதாக அறிவித்து இருக்கிறது. 

இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) வங்கிகள் மற்றும் இந்த UPI  ஆப்ஸ்களுக்கு மார்ச் 31க்குள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத எண்களை நீக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறை கொண்டுவந்ததன் நோக்கம் என்ன என்றால் பய்னபடுத்தப்படாத மொபைல் எண்களால் ஏற்பட கூடிய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. செயல்படாத மொபைல் எண்கள் பரிவர்த்தனைகளில்(Transaction) பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செயல்படாத மொபைல் எண்கள்:

ஒரு மொபைல் எண் 90 நாட்களுக்கு மேல் Voice Call, SMS அல்லது Mobile Data போன்றவற்றை பயன்படுத்தாவிட்டால் அது செய்லடுத்தப்படாத மொபைல் எண்ணாக கருதப்படுகிறது. இந்த எண்கள் புதிய பயனர்களுக்கு மீண்டும் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த எண்கள் உங்கள் வங்கி மற்றும் பிற நிதி சேவைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது, பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய மாற்றம்:

  • ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு இது போன்ற வங்கி கணக்குகளை நீக்கும் பணி வாராந்திர அடிப்படையில் நடைபெறும்.
  • செயல்படாத மொபைல் எங்களுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகள் மற்றும் UPI ID’s வாராந்திர அடிப்படையில் நீக்கப்படும்.
  • இந்த புதிய விதிமுறை, புதிய பயனர்களுக்கு மொபைல் எண்கள் மீண்டும் வழங்கப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க உதவும்.
  • எனவே, உங்கள் மொபைல் எண் செயல்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் உங்கள் வங்கி கணக்கு அல்லது UPI சேவைகள் பாதிக்கப்படலாம்.

உங்கள் வங்கி கணக்குகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்:

  • உங்கள் மொபைல் எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
  • உங்கள் வங்கி மற்றும் UPI ஆப்ஸ்களில், உங்கள் மொபைல் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் மொபைல் எண் செயல்படாததாக இருந்தால், உடனடியாக அதை செயல்படுத்தவும் அல்லது புதிய எண்ணை வங்கி மற்றும் UPI ஆப்ஸ்களுடன் இணைக்கவும்.
இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 News
Advertisement