Google Pay -ல் இப்படி ஒரு வசதியா | Google Pay Rupay Credit Card Details in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! நீங்கள் Google Pay பயன்படுத்துகிறீர்களா..? அப்போ உங்களுக்கு ஒரு நற்செய்தி கூறப்போகிறேன். அது என்ன நற்செய்தியாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படிக்க தொடங்குங்கள். முன்பு இருந்த காலகட்டத்தில் அனைவருமே வங்கிக்கு சென்று தான் பணத்தை அனுப்பவோ பெறவோ செய்வார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை.
அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளை இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்தே பணப்பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து Google Pay பயனர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன வசதி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Google Pay பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்..!
பொதுவாக இன்றைய நிலையில் Google Pay, Phone Pay போன்ற செயலிகளை பயன்படுத்தி போன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து வருகிறோம். உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், ஒருவருக்கு பணம் அனுப்புவது, பணம் பெறுவது, வாங்கும் பொருட்களுக்கு போன் மூலம் பணம் செலுத்துவது, கரண்ட் பில் போன்றவற்றை வீட்டிலிருந்தே போன் மூலம் செலுத்துவது போன்றவற்றை செய்து வருகிறோம்.
அதனை தொடர்ந்து Google Pay பயனர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அது Google Pay -வில் தற்போது Rupay கிரெடிட் கார்டுகளை இணைத்து UPI பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெயின் விலை இவ்வளவு குறைந்து விட்டதா.. காரணம் என்ன தெரியுமா |
அதாவது Google Pay -வில் RuPay கிரெடிட் கார்டு அடிப்படையிலான UPI பேமெண்ட்டுகளை தொடங்குவதற்கு Google நிறுவனம் National Payments Corporation Of India உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
எனவே இனி பயனர்கள் Google Pay மூலம் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து பணம் செலுத்த முடியும். இதனை தொடர்ந்து தற்போது Axis Bank, Canara Bank, HDFC Bank, Indian Bank, Kotak Mahindra Bank, Bank of Baroda, Punjab National Bank மற்றும் Union Bank of India போன்ற வங்கிகள் வழங்கும் RuPay கிரெடிட் கார்டுகளை Google Pay ஆதரிக்கிறது.
இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் மேலும் சில வங்கி ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்க Google Pay திட்டமிட்டுள்ளது.
அடடே இது அல்லவா ஆபர் என்று சொல்லும் அளவிற்கு 61 ரூபாயில் ஜியோவின் அதிரடியான திட்டம் |
அதுபோல Google Pay செயலியில் இதுவரை வங்கி கணக்கு இணைக்கும் போது டெபிட் கார்டு பயன்படுத்தி மட்டுமே இணைக்க முடியும். ஆனால் இனி கிரெடிட் கார்டு இணைக்கும் வசதியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் விசா மற்றும் மாஸ்டர் வழங்கிய கிரெடிட் கார்டுகளை தற்போது இணைக்க முடியாது என்று கூறியுள்ளது.
மேலும் இது Google Pay பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
Latest News👉 Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |