Google Pay UPI ID NPCI Rules and Regulations
இந்த நவீன காலத்தில் Google Pay, Phone Pay மற்றும் Paytum என்பவை எல்லாம் சர்வ சாதாரணமாக ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் பண பரிவர்த்தனைக்காக யாரும் அதிகமாக வங்கிக்கு செல்வது இல்லை. அதற்கு மாறாக எளிய முறையில் இத்தகைய ஆப்கள் மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ பணத்தினை எடுத்து விடுகிறார்கள். அந்த வகையில் இத்தகைய பயன்பாடு என்பது அனைவருக்கும் உதவக்கூடிய முறையில் எளியவையாக இருந்தாலுமே கூட நாம் பாதுகாப்பான முறையிலும், சில விதிமுறைகளுக்கு உட்பட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் தற்போது இந்திய தேசிய கட்டணக் கழகம் ஒரு புதிய அறிவிப்பை Google Pay, Phone Pay யூசர்களுக்கு அறிவித்துள்ளது. ஆகையால் அது என்ன அறிவிப்பு என்பதை விரிவாக செய்தி வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
யுபிஐ யூசர்களுக்கு புதிய அறிவிப்பு:
Google Pay, Phone Pay மற்றும் Paytum இவற்றை எல்லாம் பலருக்கும் மிகவும் உதவியளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட இவற்றை நாம் பயன்படுத்தும் முறையினை பொறுத்து தான் நமக்கான பாதுகாப்பு என்பது அமையும்.
அப்படி பார்க்கையில் சிலர் ஆர்வத்துடன் Google Pay, Phone Pay ஆகியவற்றை ஓபன் செய்து இருப்பார்கள். ஆனால் அதற்கு பிறகு ஓரிரு முறை பயன்படுத்தியதோடு அப்படியே விட்டு விடுவார்கள்.
இவ்வாறு செய்வது என்பது தவறு கிடையாது. அதுவே 1 வருடம் அதற்கும் மேலாக UPI ஐடியை பயன்படுத்தாமல் இருப்பது என்பது நமக்கு அவ்வளவு நல்லது. ஏனென்றால் UPI மோசடி நடக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
ஆகவே இப்படிப்பட்ட சிக்கலை தவிர்க்கும் விதமாக இந்திய தேசிய கட்டணக் கழகம்–NPCI ஒரு புதிய அறிவிப்பு அல்லது விதிமுறையினை கொண்டு வந்துள்ளது.
அதாவது 1 அல்லது 1 வருடத்திற்கு மேல் செயலில் இல்லாமல் இருக்கும் Google Pay, PhonePe மற்றும் Paytm ஆகிய UPI ஐடிகள் 2023 டிசம்பர் மாதம் 31 முதல் செயலிழக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே ஒரு நபர் 1 வருடத்தில் UPI ஐடி பயன்படுத்தாமல் அப்படியே வைத்து இருந்தார்கள் என்றால் இதேபோல் ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் செயலிழக்கப்படும் என்றும் இந்திய தேசிய கட்டணக் கழகம் -NPCI அறிவித்துள்ளது.
இத்தகைய அறிவிப்பின் மூலம் அனைத்து UPI ஐடிகளும் செயல்படுத்தப்படும் என்பதால் எந்த விதமான பண மோசடியும் நடைபெறாது என்பதே இதன் நோக்கமாகும்.
Google pay பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |