அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை…! அப்போ இந்த நியூஸ் உங்களுக்கு தானா…

Advertisement

இலவச மடிக்கணினி திட்டம் 2023

தமிழக அரசானது இதுநாள் நாள் வரையிலும் நிறைய திட்டங்களை மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அறிவித்து அதனை செயல்முறை படுத்தி வந்தது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அளித்து வந்தது. அதாவது இலவச சீருடை, நோட்டு புத்தகம், மிதிவண்டி, உதவித்தொகை மற்றும் இலவச மடிக்கணனி என இவற்றை எல்லாம் வழங்கி வந்தது. ஆனால் இதில் ஒன்று அல்லது இரண்டு வருடங்களாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் திட்டமானது பாதியிலேயே நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல் ஆனது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சியினை அளிக்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை ஆனது இலவச மடிக்கணனி திட்டம் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. எனவே அது என்ன அறிவிப்பு மற்றும் இந்த அறிவிப்பானது அரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா..? போன்ற கேள்விகள் அனைத்திற்கும் இந்த பயனுள்ள பதிவின் மூலம் விடையினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் 2023:

தமிழகம் மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளிலும் கடந்த 2 முதல் 3 வருடங்களாக கொரோனா தொற்று ஆனது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் உணர முடிந்த ஒன்றாக இருந்தது.

இந்த கொரோனா தொற்று காரணமாக அன்றாட செயல் முறைகள் முதல் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்பு காரணமாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆனது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுநாள் வரையிலும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 38,00,000 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும், கடந்த மூன்று வருடங்களாக அதாவது 2019 முதல் பயின்ற மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணனி வழங்கப்படமால் இருப்பதாகவும் சுட்டி காட்டி கூறியுள்ளார்.

 ஆகையால் இது வரையிலும் மடிக்கணினிகள் வழங்கப்படாமல் இருந்த மொத்தம் மாணவர்களுக்கு 14,00,000 மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். 

எனவே தமிழ்நாடு அரசு மடிக்கணனி வழங்கும் திட்டமானது நிறுத்தப்படவில்லை என்பதனையும் தெளிவாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ 12th Public Exam எழுதி இருக்கீங்களா.. அப்போ உங்களுக்கான Result தேதி இது தான் தெரிஞ்சுக்கோங்க.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement